விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான பண்டிகை. இந்த நாளில் விநாயகர் பெருமானுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் செய்து படைக்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது கொழுக்கட்டை. இனிப்பு சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. இந்தப் பதிவில் முற்றிலும் சுவையான கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
முந்திரி, பாதாம்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர், பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து சேர்த்து கலக்கினால் பூரணம் தயார்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து, உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான மாவாக பிசையவும். மாவை பிசைந்த பிறகு, அதை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் பூரணத்தை வைத்து கொழுக்கட்டை வடிவில் உருவாக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் உருவாக்கிய கொழுக்கட்டைகளை போட்டு வேக வைக்கவும். கொழுக்கட்டைகள் மிதக்கத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக ஒரு கடாயில் நெய் விட்டு காய்ச்சி, வேக வைத்து கொழுக்கட்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை தயார்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிது. இந்த கொழுக்கட்டையை விநாயகருக்கு படைத்து உங்கள் குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.