
மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை
தேவையானவை:
பதப்படுத்திய அரிசி மாவு-1கப், தேங்காய் துருவல் -1/2கப்,நெய்-1டீஸ்பூன், பொடித்த வெல்லம் -1/2கப், பழக்கலவை-1கப், ந. எண்ணெய் -சிறிதளவு உப்பு.
செய்முறை:
வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். அதை வடிகட்டி வைக்கவும். இதை பாகு பதம் வைத்து ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் சேர்த்து நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள் கிளறி இறக்க பூரணம் தயார்.
இரண்டு கப் நீருடன் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவை கட்டி தட்டாமல் கிளறி இறக்கவும். மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து அச்சிலோ, கையாலோ மோதகம் செய்து பூரணத்தை வைத்து மூடிவைக்கவும். கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 6-7நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். சுவையான ஃப்ரூட்கொழுக்கட்டை தயார்.
மல்டி கிரெய்ன் சத்து மாவு கொழுக்கட்டை
தேவையானவை:
மல்டி கிரெய்ன் சத்து மாவு -3கப், தேங்காய் துருவல்-1கப், பொடித்த நாட்டுச் சர்க்கரை -2கப், ஏலக்காய்த்தூள், தேன், நெய்-சிறிதளவு.
செய்முறை:
மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், வறுக்கவும். பின் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பின் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து மோதகம் செய்து அதில் பூரணத்தை வைத்து மூடவும். வாணலியில் எண்ணெய், நெய் 1டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள மோககத்தை போட்டு பொரித்து எடுக்கவும். சற்று ஆறியதும் மேலாக தேன் ஊற்றி பரிமாறவும்.
கம்பு-நெல்லிக்காய் கொழுக்கட்டை
தேவையானவை:
கம்பு மாவு-2கப், வேகவைத்து நறுக்கிய நெல்லிக்காய் -1/2கப், தேங்காய் பால்-11/2கப், காராமணி-1/4கப், (ஊற வைத்து வேக வைத்தது), கறிவேப்பிலை, மல்லி, ப மிளகாய் விழுது-1டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் -1டேபிள் ஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை;
மாவை வறுத்து எடுக்கவும். அதனுடன் சுடு நீரை உப்பை சேர்த்து ஊற்றி எண்ணெய் விட்டு பிசிறி கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து ,ப மிளகாய் விழுது சேர்த்து கிளறவும். வெந்த காராமணி, நறுக்கிய தேங்காய் பால் சேர்த்து கலந்து தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் வெந்த நெல்லிக்காயை சேர்க்கவும். இதில் பிசிறி வைத்துள்ள கம்பு மாவு சேர்த்துக்கிளறி வெந்ததும் இறக்கவும். இந்த மாவை விருப்பமான வடிவத்தில் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சத்தான கம்பு நெல்லி கொழுக்கட்டை தயார்.
சம்பா ரவை பிடி கொழுக்கட்டை:
தேவையானவை:
சம்பா ரவை -1 கப், நறுக்கிய வெங்காயம் -1, இஞ்சித் துருவல்-1டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு-1/4டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை -1டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -3, கறிவேப்பிலை - எண்ணெய், உப்பு.
செய்முறை:
வெறும் கடாயில் ரவையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் அரிந்ததை சேர்த்து வதக்கவும். சோம்பு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்ததும் ரவையை மெதுவாக சேர்க்கவும். கட்டியில்லாமல் கலந்து வெந்ததும் இறக்கவும். சற்று ஆறியதும் பிடி கொழுக்கட்டை களமாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். கொத்தமல்லி சட்னி, கார சட்னியுடன் பரிமாறவும்.