ஹோட்டல் பூரிக்கிழங்கு மசால் வேண்டுமா? இப்படி செய்து பாருங்கள்!

பூரிக்கிழங்கு மசால்...
பூரிக்கிழங்கு மசால்...

ஹோட்டலில் செய்வது போல் பூரி மசால் நீங்களும் செய்யுங்களேன்? என்று வீட்டில் கேட்பார்கள் அது என்ன ஹோட்டல் பூரி கிழங்கு மசால்? ரொம்ப சிம்பிளா இதை செய்யலாம் வாங்க.


தேவையான பொருட்கள்:
பெரிய சைஸ் உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 5
பச்சை மிளகாய் -  4
வரமிளகாய் -2
மஞ்சள் தூள்- சிறிது
இஞ்சி  - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது கடுகு உளுந்து கடலைப்பருப்பு - தாளிக்க சோம்பு  - சிறிது
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
ருளைக்கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து ஒன்றிரண்டாக மசித்து கொள்ளுங்கள் .நைசாக மசிக்க கூடாது . பெரிய வெங்காயத்தை இரண்டாக அறிந்து சற்று பெரியதாக நீளமாக அரிந்து கொள்ளுங்கள். இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக்குகள். பச்சை மிளகாய்களை  நறுக்கி  வரமிளகாய் கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.  


இப்போது ஒரு அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்  கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு  கூடவே சோம்பையும் போட்டு தாளித்து அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய் போட்டு தாளிக்கவும் . கூடவே கருவேப்பிலை போடவும்  வெங்காயம் எந்த அளவுக்கு நிறைய இருக்கிறதோ அந்த அளவுக்கு மசால் நன்றாகவும் இருக்கும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி  சிறிது நீரூற்றி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப்  போட்டு  தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக் நன்கு கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து மேலே கொத்தமல்லித்தழை போட்டு மூடி வையுங்கள்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால நோய்களுக்கான மருந்து வீட்டிலேயே இருக்கு!
பூரிக்கிழங்கு மசால்...

இதுவே ஹோட்டல் பூரி கிழங்கு மசால்.
குறிப்பு - அதிகம் உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் அதிகம் வேண்டுமென்றால் வெங்காயம் வதங்கியதும் ஒரு சிறிய கப் பொட்டுக்கடலை மாவு அல்லது கடலை மாவை நன்கு நீரில் கரைத்து வெங்காயத்துடன் சேர்த்து கொதி வந்ததும் அதில் உருளைக்கிழங்குகளை போட்டால் மசாலா அதிகம் வரும்.

இனி நீங்கள் பூரி கிழங்குக்காக ஹோட்டல்களுக்கு செல்ல வேண்டியதில்லை. சூப்பரான பூரி மசாலாவை வீட்டிலேயே ருசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com