குளிர்கால நோய்களுக்கான மருந்து வீட்டிலேயே இருக்கு!

Home Remedies for Winter Illnesses
Home Remedies for Winter Illnesseshttps://photodune.net
Published on

குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை மனிதர்களை பாடாய்படுத்தும். இதனுடன் மூட்டுவலி, இதய நோய், சர்க்கரை நோய் போன்றவையும் அதிகரிக்கிறது. ஆனால். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே  இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

மஞ்சள்: இந்திய சமையலில் மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருள் மஞ்சள். இது வயிற்று எரிச்சல், தலைவலி, நெஞ்செரிச்சல், குடல் கோளாறுகளுக்கு உகந்தது. தொண்டைபுண், இருமலுக்கு மிகவும் ஏற்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்த பொருளாகும்.

துளசி: துளசி கல்லீரலை பாதுகாக்கும் ஒரு மூலிகையாகும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஐந்து துளசி இலைகளை மென்று தின்று வந்தால் உடலில் அத்தனை பாகங்களும் நன்றாக வேலை செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசி இலைகளை காய வைத்து பவுடராக்கியும் உண்ணலாம். துளசி டீ போட்டும் குடிக்கலாம்.

அஸ்வகந்தா: அஸ்வகந்தாவை ஆயுர்வேத மூலிகைகளின் ராஜா என்று அழைக்கிறார்கள். மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. நன்றாகத் தூக்கம் வரவழைக்கும் தன்மையுடையது. தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கான மிகச் சிறந்த மருந்து அஸ்வகந்தா. இது ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும்.

இஞ்சி: இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற பொருள் உள்ளது. குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. தொண்டை வலி, இருமல், சளி ஆகியவற்றுக்கு இஞ்சி கஷாயம் சிறந்தது. எனவே, குளிர்காலத்தில் தினமும் இஞ்சி டீ குடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆவாரை பூத்திருக்க; நோவாரை கண்டதுண்டோ?
Home Remedies for Winter Illnesses

நெல்லிக்காய்: நெல்லிக்காய் வைட்டமின் சியும் ஆன்ட்டி ஆக்சிடென்சும் நிறைந்தது. இதில் உள்ள குரோமியம், சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை  சீராக வைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது. இதைக் கழுவி விட்டு பச்சையாகவோ அல்லது காய வைத்து அரைத்து பவுடர் செய்தோ தினமும் சாப்பிடலாம்.

வேப்ப இலைகள்: வேப்ப இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையது. வேப்பம்பூ டீ குடிப்பதால் சளி, காய்ச்சல் வராது. மூட்டுவலி நீங்கும். இதனால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com