
களைப்பாக உணர்ந்தால் உடனே ஏதேனும் பழச்சாறு அருந்தத் தோன்றும். கடைகளில் விற்கப்படும் செயற்கை பொருட்கள் கலந்த பழச்சாறுகளை விட அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை பழங்களை வைத்து நாமே வீட்டில் பழச்சாறுகளை தயாரிக்கும்போது நமக்கு மலிவான விலையிலும் ஆரோக்கியமான முறையிலும் பழச்சாறு வகைகள் கிடைக்கும்.
மேலும் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து தயாரித்து நீண்ட நாட்கள் இவற்றை சேகரித்து வைக்கும்போது எந்த பருவத்திலும் நமக்கு எளிதாக பழரசம் கிடைக்கும். பழச்சாறு தயாரிப்பில் சில விதிகளை கவனமுடன் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. அந்த விதிகள் பற்றி இங்கு காண்போம்.
பழங்களை நன்கு கழுவி துடைத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் அழுகாமல், அடிபடாமல் ப்ரெஷாக இருக்க வேண்டும். காயாக இல்லாமல் சாறு பிழியத்தக்க பருவத்தில் இருக்கவேண்டும்.
அவற்றை வெட்டுவதற்கு இரும்பு கத்தியையும், சர்க்கரை பாகு காய்ச்சுவதற்கு இரும்பு வாணலியையும் பயன்படுத்தக்கூடாது. எவர்சில்வர் கத்திகள், கரண்டிகள், பாத்திரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேண்டும் ஆனால் அலுமினியம் பயன்படுத்தலாம்.
பிழிந்த சாற்றை வடிகட்டி லிட்டர் கப்பில் அளந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அளவுகள் முக்கியம். சர்க்கரை, சிட்ரிக் அமிலம், தண்ணீர் மூன்றையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைத்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி சுத்தமான துணியில் வடிகட்ட வேண்டும்.
இந்த சர்க்கரை பாகு குளிர்ந்த பின்தான் பழச்சாற்றை சேர்க்க வேண்டும். எசன்ஸ், கலர் போன்றவற்றையும் அப்போதுதான் சேர்க்க வேண்டும். கடைசியாக ரசாயன உப்பை சிறிது வெந்நீர் கலந்து ஆறிய பின் ஊற்றி பழரசத்துடன் நன்றாக கலக்கவேண்டும்.
சுடு சுடுநீரால் சுத்தம் செய்யப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்ட சுத்தமான வாய் குறுகிய பாட்டில்களில் மேலே சிறிது இடம் விட்டு சாற்றல நிரப்ப வேண்டும்.
குளிர்ந்த ஈரமில்லாத இடத்தில் நன்கு இறுக்கமாக மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். தயாரித்த கெட்டி பழச்சாற்றை மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் நீருடன் கலந்து அருந்தலாம்.
கே எம் எஸ் எனப்படும் பொட்டாசியம் மெடாபை சல்பேட் ரசாயன உப்புக்கள் கலந்த பானங்களை ஒரு வாரம் கழித்து உபயோகிப்பதே நல்லது. அன்றே சாப்பிட வேண்டுமானால் இந்த உப்பை சேர்க்கத் தேவையில்லை.
அதேபோல் சிட்ரிக் அமிலம் சர்க்கரைப்பாகில் உள்ள அழுக்கை நீக்குகிறது. சர்க்கரை பாகை திரவ நிலையில் வைத்திருக்கவும் பழக்கின் ருசியை அதிகரித்து நீண்ட நாட்கள் கெடாமலும் பாதுகாக்கிறது என்பதால் சாற்றில் சிட்ரிக் அமிலம் சேர்ப்பது அவசியம்.
சர்க்கரை சேர்த்து நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தும் சோடியம் பென்சொயட் (S B) மற்றும் பொட்டாசியம் மெகாபை சல்பேட் (K M S) ஆகிய ரசாயன உப்புகளை தகுந்த அளவில் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
இனி என்ன? தரமான பழச்சாறுகளை தைரியமாக வீட்டில் செய்து அருந்துங்கள்.