சமையலில் நேரத்தை மிச்சப்படுத்தணுமா? இதோ சில எளிமையான வீட்டுக்குறிப்புகள்!

Some simple homework tips
Want to save time in cooking?
Published on

மையல் என்பது வெறும் உணவு செய்வது மட்டுமல்ல. அது ஒரு கலை, அனுபவம், மற்றும் அன்பின் வெளிப்பாடு. ஆனால், தினசரி வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தி, சுவையையும் தரத்தையும் பாதுகாக்கும் சில சின்னச் சின்ன யுக்திகள், சமையலை இன்னும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள சமையல் குறிப்புகள், உங்களின் சமையல் திறனை மேம்படுத்தி, தினசரி சமைப்பை சுலபமாக்கும்.

1.காய்கறி மற்றும் பழங்களை நீண்ட நாள் பசுமையாக வைத்துக்கொள்ள:

கீரையை சுத்தம் செய்து, துணியில் துடைத்து, ஏர்-டைட் பெட்டியில் tissue paper உடன் வைத்தால் ஈரப்பதம் குறைந்து பசுமை நீடிக்கும்.

ஆப்பிள், வாழைப்பழம், மாங்காய் போன்ற பழங்களை ஒன்றாக வைக்க வேண்டாம் — எத்தில் வாயு பழுத்தலை வேகமாக்கும்.

2. வெங்காயம், பூண்டு நறுக்கும்போது கண்ணீர் வராமல் செய்ய:

நறுக்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும். அல்லது கத்தியின் பக்கத்தில் சிறிது தண்ணீர் தடவி நறுக்கவும். மேலும் வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் போட்டு விட்டு பின்னர் தோல் உரித்து வெட்டினால் கண்ணீர் வராது.

3. சாதம் சமைக்கும்போது:

அரிசி கழுவி போடும் வேளையில் சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அரிசி வெள்ளையாகவும் ஒட்டாமலும் இருக்கும்.

4. புளி வேகமாக கரைய:

புளியை சூடான நீரில் ஊறவைத்து, விரைவில் கரைய வைக்கலாம். புளி நீர் எப்போதும் கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் சேமிக்கவும், பிளாஸ்டிக்கில் வேண்டாம்.

5. உப்பை கட்டி ஆகாமல் பாதுகாக்க:

உப்பு டப்பாவில் சில தானியங்கள் அரிசி போடவும். ஈரப்பதம் குறைந்து கட்டி ஆகாது. அல்லது சில வெந்தயம் தானியங்களை உப்பு டப்பாவில் போடலாம். வெந்தயம் ஈரப்பதத்தை உறிஞ்சி, உப்பு கட்டியாகாமல் வைத்துக் கொள்ளும். மேலும், வெந்தயத்தின் நறுமணம் உப்பின் சுவையை பாதிக்காது. இது கிராமங்களில் பழமையாக பயன்படுத்தப்படும் ஒரு நல்ல முறையாகும்.

6. வடை எண்ணெய் குடிக்காமல் வர:

வடை மாவில் சிறிது சூடான எண்ணெய் அல்லது அரிசி மாவு சேர்த்தால் எண்ணெய் குடிக்காமல் பொரிந்து வரும். அல்லது மாவை பிசையும் போது சிறிது ரவை (சூஜி) சேர்க்கலாம். ரவை மாவில் உள்ள ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தி, வடைக்கு நல்ல மொறுமொறுப்பு தரும். எண்ணெய் உள்வாங்குவதை குறைக்கும், அதே நேரத்தில் சுவையையும் மேம்படுத்தும்.

7. பால் கொதிக்கும்போது பொங்காமல் இருக்க:

பாத்திரத்தின் வாயில் மர கரண்டி வைத்து கொதிக்க விட்டால் பால் பொங்காது. அல்லது அடுப்பை முதலில் இருந்தே சிம்மில் வைத்து பாத்திரத்தின் மேல் மூடி வைக்காமல் விட்டாலும் பொங்காது.

8. சாம்பார் / குழம்பில் அதிக உப்பு ஆகிவிட்டால்:

ஒரு சிறிய உருளைக்கிழங்கை தோல் சீவி போட்டு சில நிமிடம் வேக வைக்கவும் — உப்பை உறிஞ்சி எடுக்கும்.

9. மீன் வாசனை நீக்க;

மீனை சுத்தம் செய்வதற்கு முன் எலுமிச்சைச் சாறு அல்லது வெங்காயச்சாறு தடவி கழுவவும்.

இதையும் படியுங்கள்:
வேகமான வாழ்க்கைக்கான ஒரு நிமிட ரெசிபிகள்!
Some simple homework tips

10. அடுப்பில் காய்கறி விரைவாக வெந்துவர:

வேகவைக்கும் தண்ணீரில் சிறிது சோடா உப்பு சேர்த்தால் காய்கறி நிறம் மாறாமல், விரைவாக வேகும்.

சிறிய மாற்றங்களும் சரியான முறைகளும், சமையலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இத்தகைய பயனுள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், சுவை, ஆரோக்கியம், மற்றும் நேர மேலாண்மை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் கைப்பற்றலாம். இனி, உங்கள் சமையல் அனுபவம் சோர்வில்லாமல், ஆர்வமுடன், எப்போதும் சுவையுடன் நிறைந்ததாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com