
இன்றைய பர பரப்பான சூழலில் அவசரத் தேவைக்கு சட்டுப் புட்டுன்னு தயாரிக்க பத்து வகை ஒரு நிமிட ரெசிபி இதோ:
ரெட் லென்டில்-தக்காளி கறி
தேவை:
சிவப்பு பருப்பு ½ கப்
தக்காளி 2
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
சில்லி பவுடர் ½ டீஸ்பூன்
தனியா தூள் ¾ டீஸ்பூன்
சீரக தூள் ½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நெய் 3 டீஸ்பூன்
தண்ணீர் 2½ கப்
செய்முறை:
ஒரு இன்ஸ்டன்ட் பாட் எலக்ட்ரிக் பிரஷர் குக்கரில் அனைத்துப் பொருட்களையும் சேர்ந்து நன்கு கலந்துவிட்டு, குக்கரை மூடவும். குக்கிங் மோடில் ஒன் மினிட் செட் பண்ணி, ஆன் பண்ணவும். ஒரு நிமிடம் ஆனதும் குயிக் ரிலீஸ் பட்டனை அழுத்தி, மூடியை திறக்க, கறி ரெடி.
காய்கறி கலவை கறி
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளை கிழங்கு, வெங்காயம் அனைத்தும் சேர்ந்து நறுக்கிய துண்டுகள் ஒரு கப், தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு, அரை கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் ஆகிய அனைத்தையும் இன்ஸ்டன்ட் பாட் எலக்ட்ரிக் பிரஷர் குக்கரில் சேர்த்து கலந்துவிடவும். குக்கரை மூடியால் மூடி குக்கிங் மோடில் ஒன் மினிட் செட் பண்ணவும். ஒரு நிமிடத்தில் காய்கறி கலவை கறி ரெடி.
இனிப்பு ரெட் அவல்:
150 கிராம் ரெட் அவல், கால் கப் தேங்காய் துருவல், தேவையான பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் சிறிது சேர்த்துக்கலந்து ஒரு நிமிடம் வைத்து உண்ண, ஆரோக்கியமான காலை உணவு.
கேரட் கீர்:
பத்து பாதாம் பருப்பு, நறுக்கிய கேரட் துண்டு ஒரு டேபிள் ஸ்பூன், தேவையான சர்க்கரை சேர்ந்து மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து வடி கட்டி எடுக்க சத்தான கேரட் கீர் ரெடி.
சீஸ் சாண்ட்விச் ரெடி
இரண்டு துண்டு கோதுமை பிரட் ஸ்லைஸ்களுக்கு இடையே மூன்று துண்டு மிளகுத் தூள் தூவிய தக்காளி துண்டுகள் மற்றும் ஒரு சதுர வடிவ சீஸ் துண்டு (cheese spread) வைத்து விட்டால் ஒரு நிமிட சீஸ் சாண்ட்விச் ரெடி.
ஸ்வீட் வெள்ளரி சாண்ட்விச் ரெடி
இரண்டு துண்டு கோதுமை பிரட் ஸ்லைஸ்களை எடுத்து ஒன்றில் பீ நட் பட்டர் தடவி அதன் மீது நான்கு வட்ட வடிவ வெள்ளரி துண்டுகளை பரத்தி மற்றொரு பிரட் ஸ்லைஸ் வைத்து மூடிவிட்டால் ஒரு நிமிட ஸ்வீட் வெள்ளரி சாண்ட்விச் ரெடி.
ரவா உப்மா
அரை கப் ரவை, சின்ன வெங்காயம் 5, ஒரு பச்சை மிளகாய், ஒரு சிவப்பு மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய், ஒரு கப் தண்ணீர், ஒரு கைப்பிடி மல்லி இலைகள் ஆகியவற்றை இன்ஸ்டன்ட் பாட் எலக்ட்ரிக் பிரஷர் குக்கரில் சேர்த்து கலந்து, மூடியால் மூடி ஒரு நிமிடம் சமைத்து எடுக்க சுவையான உப்மா தயார்.
ஆரஞ்சு ஜூஸ்:
இரண்டு சாத்துக்குடி பழத்திலிருந்து ஜுஸை பிழிந்தெடுத்து அதில் கால் டம்ளர் தண்ணீர் மற்றும் இரண்டு டீஸ்பூன் க்ளுகோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க அருமையான ஆரோக்கிய பானம் தயார்.
சத்தான காய்கறி சாலட்
நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் துண்டுகளை ஒரு பௌலில் போட்டுக் கலந்து, பெப்பர் தூள் உப்புத் தூள் சேர்க்க சத்தான காய்கறி சாலட் தயார்.
ஆம்லெட் சாண்ட்விச் ரெடி
சூடான தோசைக் கல்லில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் தூள் உப்புத்தூள் தூவி, திருப்பிப் போட்டெடுத்து இரண்டு துண்டு கோதுமை பிரட் ஸ்லைஸ்களுக்கு நடுவே வைக்க ஆரோக்கியமான ஆம்லெட் சாண்ட்விச் ரெடி.