வெயில்காலம் வந்தாலே வாட்டர் மெலனும் கூடவே சேர்ந்து வந்துடும். வாட்டர் மெலன் நம்முடைய உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும், ஜீரணத்திற்கு நல்லது. இன்னைக்கு வாட்டர்மெலனை வைத்து கூலான ஒரு ட்ரிங்க் பண்ணலாம் வாங்க.
வாட்டர்மெலன் மின்ட் மோஜிட்டோ செய்ய தேவையான பொருட்கள்:
சிறிதாக வெட்டிய வாட்டர்மெலன்-2 கப்.
புதினா இலை- 10
ஊற வைத்த சப்ஜி விதை -2 தேக்கரண்டி.
சக்கரை- 1 தேக்கரண்டி.
எழுமிச்சை சாறு-1 தேக்கரண்டி.
ஐஸ்- தேவையான அளவு.
சோடா- தேவையான அளவு.
வாட்டர்மெலன் மின்ட் மோஜிட்டோ செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் சிறிதாக வெட்டிய வாட்டர்மெலன் 2 கப், புதினா 10 இலைகள், சக்கரை 1 தேக்கரண்டி, தேவையான அளவு ஐஸ், அத்துடன் கடைசியாக எழுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு கண்ணாடி தம்ளரில் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிய வாட்டர்மெலனை போட்டு கொள்ளவும். ஊற வைத்த சப்ஜா விதை 2 தேக்கரண்டி, தேவையான அளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்த வாட்டர் மெலன் ஜூஸை பாதி டம்ளர் ஊற்றிவிட்டு மீதி பாதிக்கு கடைசியாக சோடா சேர்த்து பரிமாறவும். சூப்பரான வாட்டர்மெலன் புதினா மோஜிட்டோ தயார். அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே ஜில்லுன்னு செஞ்சி பாருங்க.