உடல் எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. 30 கிராம் கினோவாவில் 96 கலோரி, 16 கிராம் கார்போஹைட்ரேட், 3.9 கிராம் புரோட்டீன், 1.6 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் ஃபைபர் இருக்கிறது. இதில் நார்ச்சத்து, கார்ப்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு கலவை உள்ளது. கினோவாவில் கிச்சடி , உப்புமா, புலாவ் மற்றும் சூப் முதலிய உணவுகளை தயாரிக்கலாம். கினோவா உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குயினோவாவில் உள்ள மொத்த ஃபைபர் உள்ளடக்கத்தில் 80% க்கும் அதிகமானவை செல்லுலோஸ் போன்ற கரையாத இழைகளாகும். கினோவாவினை சமைப்பது எளிது.
கினோவா சூப்:
வேகவைத்த கினோவா 1/2 கப்
வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
காரட் பீன்ஸ் பட்டாணி தேவையான அளவு ( பொடியாக நறுக்கியது )
வெங்காயம் 1 சிறியது ( பொடியாக நறுக்கியது )
பூண்டு பல் 5 ( பொடியாக நறுக்கியது )
மிளகுத்தூள் தேவையான அளவு
உப்பு
செய்முறை:
1.முதலில் காய்கறிகளை உப்பு செய்து வேக வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3.பின்னர் அதில் வேக வைத்த காய்கறிகள் மற்றும் வேகவைத்த கினோவா சேர்த்து கிளறி கால் டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
அதில் தேவையான அளவு மிளகு தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக பரிமாறலாம்.