கோதுமை வெஜிடபிள் நூடுல்ஸும் - ஆகாக்ரகாயிலு பஜ்ஜியும்!

healthy foods...
healthy foods...

வீட்டில் நம் கை பட கோதுமை மாவை வறுத்து வெந்நீர் ஊற்றி பிசைந்து சேவை நாழியில் பிழிந்து தேவையான காய்கறிகளை சேர்த்து நூடுல்ஸ் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். எப்பொழுதுமே விதவிதமாக கடையில் கிடைக்கும் நூடுல்ஸ் வாங்கி  சமைத்து சாப்பிடுபவர்கள் என்றைக்காவது சில நாட்கள் இதுபோல் செய்து கொடுத்து அசத்தலாம். அதன் செய்முறை இதோ:

செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -ஒரு டம்ளர் 

பச்சை பட்டாணி, காலிபிளவர், கேரட், பீன்ஸ், கேப்ஸிகம், பிஞ்சு கோவக்காய் எல்லாமாக சேர்த்து அரிந்தது -2கப்

பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது

கசூரி மேத்தி- சிறிதளவு

மிளகாய் ,மல்லி பொடி தலா- ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள்- சிறிதளவு

கரம் மசாலா பொடி- இரண்டு பிஞ்ச்

தக்காளி சாஸ் ,வினிகர்- தலா ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவை நன்கு சலித்து வெறும் வாணலியில் வறுத்து, தேவையான அளவு உப்பு வெந்நீர் விட்டு கட்டி இல்லாமல் பிசைந்து ,தேன்குழல் அச்சிற்கும் இடியாப்ப அச்சுக்கும் இடைப்பட்ட அதிக கண் உள்ள தட்டை போட்டு அதில் பிசைத்து வைத்திருக்கும் கோதுமைமாவை பிழிந்து வேகவிட்டு எடுத்து வைக்கவும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு காய்கறிகளை போட்டு வதக்கி அதனோடு சேர்த்து உப்பு மற்றும் மசாலா பவுடர் அனைத்தையும்  சேர்த்து  கசூரி மேத்தியை நொறுக்கிப் போட்டு வதக்கி கடைசியாக சாஸ், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை  ஒரு கிளறு கிளறி செய்து வைத்திருக்கும் கோதுமை நூடுல்ஸ் உடன் கலந்து விருப்பப்பட்ட சாஸ் சேர்த்து பரிமாறவும்.

ஆகாக்கரகாயிலு பஜ்ஜி:

சற்று இனிப்பு சுவை உள்ள பாவக்காய்தான் ஆகாக்கர காயிலு என்பது. 

தேவையான பொருட்கள்:

ஆகாக்கர காயிலு -4

கடலை மாவு-ஒரு கப்

அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு -இரண்டு டேபிள் ஸ்பூன் 

மல்லி விதை - ஒரு டீஸ்பூன்

மல்லித் தழை- ஒரு டீஸ்பூன் 

பச்சை மிளகாய்- 3

சோடா உப்பு- ஒரு சிட்டிகை

உப்பு , எண்ணெய் -தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
healthy foods...

செய்முறை:

மாவுகளுடன் பச்சை மிளகாயை அரைத்து கலக்கவும். மேலும் பொடியாக அரிந்த மல்லித்தழை, மல்லி விதை, உப்பு ,சோடா உப்பு அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். 

ஆகாக்கரகாய்களை மெலிதாக அரிந்து, மாவில் தோய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். லேசாக கூட கசப்பு இல்லாது இருக்கும் இந்த பஜ்ஜியை அனைவரும் விரும்பி உண்பர். இது வித்தியாசமான ருசியில் அசத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com