No கலர், No சுகர் ‘கோதுமை ரவை ஹல்வா’ செய்வது எப்படி? 

Wheat Rawa Halwa
Wheat Rawa Halwa
Published on

கோதுமை ரவை அல்வா ஒரு சுவையான இனிப்பு வகையாகும். இது பெரும்பாலும் கோதுமை ரவை, சர்க்கரை, நெய் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் சிலர், சர்க்கரை மற்றும் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்காக நிறம் இல்லாமல், சர்க்கரையின்றி கோதுமை ரவை ஹல்வா செய்வதற்கான ஒரு எளிய செய்முறை இதோ. 

தேவையான பொருட்கள்:

  • 1 கப் கோதுமை ரவை

  • 2 1/2 கப் தண்ணீர்

  • 1/4 கப் நெய்

  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

  • 1/4 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள்

  • 1/4 கப் பாதாம், பொடியாக நறுக்கியது (விருப்பத்திற்கு)

  • 1/4 கப் முந்திரி, பொடியாக நறுக்கியது (விருப்பத்திற்கு)

செய்முறை: 

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் உருக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த நெய்யில் கோதுமை ரவை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். ரவை வாசனை வெளியே வரும் வரை வதக்கவும். 

இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறுங்கள். அல்வா கெட்டியாகும் வரை குறைந்த தீயில் 15 நிமிடங்கள் அப்படியே வேக விட வேண்டும். இடையிடையில் அடி பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருங்கள். 

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் பாதாம் அல்வா-நிலக்கடலை அல்வா செய்யலாமா?
Wheat Rawa Halwa

அல்வா சரியான பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து கிளறவும். இறுதியாக அல்வா கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி பாதாம் மற்றும் முந்திரி போன்றவற்றைத் தூவி அலங்கரித்தால், சூடான கமகமக்கும் கோதுமை ரவை ஹல்வா தயார். இதில் இனிப்பு சேர்க்கப்படவில்லை என்பதால் சர்க்கரை நோயாளிகள் கொஞ்சமாக சாப்பிடுவது தவறில்லை. 

அல்வா விரைவில் கெட்டியாக தண்ணீரை கொஞ்சமாக சேர்க்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு லேசான இனிப்பு வேண்டுமென்றால் சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம். இது அல்வாவிற்கு சூப்பரான சுவையைக் கொடுக்கும். 

இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com