மன அழுத்தத்தைக் குறைக்கும் மரக்கோதுமை!

Wheat that reduces stress!
மரக்கோதுமை
Published on

மரக்கோதுமை தானியம் கம்பு, வரகு, சோளம், கோதுமைபோல  ஓரு தானிய வகையைச் சேர்ந்தது. பாப்பரை, குட்டு, பக்வீட் என பல பெயர்களால் அழைக்கப்படும் மரகோதுமையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் புரதம், கால்சியம், இரும்புசத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்  இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது. நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு  உதவுகிறது. மேலும் இது விரைவில். மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது.

பாப்பரை எனும் மரக்கோதுமை தானியத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதயம் தொடர்பான நோய்களான இதய அழற்சி மற்றும் இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கெட்ட கொலஸ்ட்ரால் உருவாவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மரக்கோதுமை மாவில் உள்ள டி சிரோ இனோசிட்டாலானது இரண்டாம் வகை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் மிக்கதாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் அஜீரண கோளாறுகளை தடுக்கிறது வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. குடல் தொடர்பான பிரச்னைகள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் சத்து எலும்புகள் வலுப்பெற உதவிபுரிகிறது  

பக்வீட்டில் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன. அவை நமது உடலின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.

ஜப்பானிய சோபா நூடுல்ஸ் போன்ற பசை இல்லாத நூடுல்ஸ் தயாரிக்க பக்வீட்மாவு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது  

இந்த மரக்கோதுமை மாவை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.. இதை கொண்டு சப்பாத்தி , பூரி, தோசை போன்ற உணவுகளை செய்யலாம்.  வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற சுவையும் சத்தும் நிறைந்த குட்டு கி பூரி செய்முறையைப் பார்ப்போம்.

மரக்கோதுமை மாவு (குட்டு) பூரி

தேவை:

மரகோதுமை மாவு        - 1 கப்

உருளைக்கிழங்கு          - 1

பச்சை மிளகாய்           - 1

மல்லி தழை, இஞ்சி       -சிறிது

நெய் அல்லது எண்ணெய்   பொரிப்பதற்கு

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடி மக்ரூன் வந்த வரலாறு தெரியுமா?
Wheat that reduces stress!

குட்டு பூரி செய்ய முதலில் ஒரு கப் மரகோதுமை மாவுடன், வேகவைத்து  துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள்,  சிறிது இஞ்சி துறுவல் சுவைக்கேற்ப கல் உப்பு பொடி மற்றும் சிறிது கருப்பு மிளகு தூள் ஆகியவற்றை நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்தில் நன்றாகப் பிசைந்து தனியே வைக்கவும். பொரிப்பதற்கு தேவையான நெய்யை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
சிறிய பூரிகளாகத் திரட்டி நெய்யில் நிதானமாகப் பொரித்தெடுக்கவும். பக்வீட் எனப்படும் குட்டு மாவு எல்லா பெரிய ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com