தீபாவளி நெருங்கி விட்டது எந்த ஊரில் எந்த பலகாரம் ஸ்பெஷல் என பார்க்கலாம். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பலகாரம் சிறப்பு பெற்றது. இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும் வீட்டிற்க்கே வந்து விடும் இந்த வகை பலகாரங்கள்.
1) திருநெல்வேலி அல்வா
2) மணப்பாறை முறுக்கு
3) செட்டிநாடு பலகாரங்கள்
4) திருச்சி லாலா கடை பூந்தி
5) சாத்தூர் காராச்சேவு.
காராச்சேவில் நிறைய வகைகள் இருக்கிறது. இனிப்பு சேவு, சீரக சேவு, மிளகு சேவு, சீனி பட்டர் சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என காராச்சேவில் பல வகைகள் இருந்தாலும் சாத்தூர் காராசேவு மிளகு தூக்கலாக போட்டு செய்யப்படுவது ரொம்ப ஸ்பெஷல்.
6) பால்கோவா ஸ்ரீவில்லிபுத்தூர்
7) அதிரசம்
கரூர் மாவட்ட வெள்ளியணை அதிரசம். இது பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய், சீரகம் கலந்து அமராவதி ஆற்று நீரும் சேர்த்து தயாரிக்கப்படுவதே வெள்ளியணை அதிரசம்.
8) மக்ரூன் முந்திரி, முட்டை, சர்க்கரையின் கலவையை மக்ரூன். தூத்துக்குடியின் சிறந்த தயாரிப்பு.
9) திருவையாறு அசோகா அல்வா
10) ஆற்காடு மக்கன் பேடா
11) ஊட்டி வர்க்கி
12) பாலவநத்தம் (விருதுநகர் மாவட்டம்) சீரணி மிட்டாய்
13) சிவகிரி (நெல்லை) சீனி மிட்டாய் 14) ஓரத்தநாடு சந்திரகலா
15) திருவாரூர் பருத்தி அல்வா
16) நாகர்கோவில் முந்திரி கொத்து
17) காரைக்குடி கந்தரப்பம்