தீபாவளிக்கு மத்தாப்பு அவசியம் கொளுத்த வேண்டும்; ஏன் தெரியுமா?
துலா மாதமாகிய ஐப்பசியில் வரும் சதுர்த்தசியன்று (தீபாவளி) உல்கா எனப்படும் நெருப்பைக் கையில் பிடித்தல் வேண்டும். இதை உணர்த்தும் விதமாகவே,
‘துலா ஹம்ஸ்தே ஸ ஹஸ்ராம் சௌ
ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:
உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித் ரூணாம்
மார்க தர்சனம்’
தீபாவளி தினத்தன்று அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்பதைத்தான் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்லோகம் வலியுறுத்துகிறது. காரணம் என்னவென்றால், ‘பித் ரூணாம்’ - பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர்கள், இந்த மத்தாப்பு வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்களெனக் கருதப்படுகிறது.
பட்டாசு வெடிக்க விருப்பமில்லாவிடினும், நமது முன்னோர்களுக்காக ஒன்றிரண்டு மத்தாப்பு கொளுத்துதல் அவசியம். இது சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.
மேலும்,
‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன்
ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா
யத்ர தீபாவளி ரிதி ஸ்ம்ருதா’
எனப்படும் இந்த ஸ்லோகம், தீபங்கள் மற்றும் வாணவேடிக்கை மூலம் அநேக தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்து, ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாமென்பதை விளக்குகிறது.