வெள்ளைச் சோளம் இட்லி & இனிப்பு பணியாரம்!

சோளம் இட்லி, பணியாரம்
சோளம் இட்லி, பணியாரம்Image credit - youtube.com

வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிட பல மடங்கு சத்துக்கள் கொண்ட உணவாகும். இவ்வகை சிறு தானியங்களில் சிறிதளவே குளுக்கோஸ் இருப்பதால் இவை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக்கூடியவை. சோள உணவுகள் உடலுக்கு உறுதியளிக்க கூடியவை.

வெள்ளைச்சோள இட்லி:

வெள்ளைச் சோளம் ஒரு கப் 

உளுந்து 1/4 கப்

வெந்தயம் ஒரு ஸ்பூன்

மூன்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் தேவையான அளவு நீர் விட்டு அரைத் தெடுக்கவும். எட்டு மணி நேரம் கழித்து உப்பு போட்டு இதனை இட்லி தட்டில் இட்லியாக வார்த்தெடுக்க ருசியான சத்தான சோள இட்லி தயார். இதனை தோசையாகவும் வார்த்து சுவைக்கலாம்.

சோள இனிப்பு பணியாரம்:

வெள்ளைச் சோளம் ஒரு கப் 

உளுந்து கால் கப் 

வெந்தயம் ஒரு ஸ்பூன்

வெல்லம் (அ) நாட்டு சக்கரை 1 கப்

ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

சோள இட்லி போலத்தான் இதுவும். உப்புக்கு பதில் பொடித்த வெல்லம், ஏலப்பொடி சேர்த்து கலந்து பணியாரக் கல்லில் சிறிது நெய் விட்டு மாவை விட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை போட்டு பொரித்தெடுக்க இனிப்பு பணியாரம் தயார்.

இப்போதெல்லாம் சிறுதானிய வகைகள், பாரம்பரிய அரிசிகள் கருப்பு கவுனி போன்றவை அவல் வகைகளாக கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு விதவிதமாக இட்லி, தோசை, இடியாப்பம், கொழுக்கட்டை என செய்து கொடுத்தால் வளரும் பிள்ளைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படாமல் வளருவார்கள்.

சிறுதானிய அவல் இனிப்பு இட்லி:

கம்பு 1/2 கப் 

கேழ்வரகு 1/2 கப்

குதிரைவாலி1/2 கப் 

சாமை1/2 கப் 

தினை1/2 கப் 

கோதுமை1/2 கப் 

வரகு1/2 கப் 

சோள அவல் 1/2 கப்

காய்ந்த திராட்சை 10 

பாதாம், முந்திரி பருப்புகள் 20 பேரிச்சம்பழம் 6 

நாட்டுச்சர்க்கரை 2 கப்

ஏலக்காய் பொடி 1 ஸ்பூன்

பால் ரெண்டு கப்

இதையும் படியுங்கள்:
சிரிப்பென்னும் அருமருந்து!
சோளம் இட்லி, பணியாரம்

மேற்கண்ட அனைத்து சிறு தானியங்களையும் சின்ன கப்புகளில் அரை அரை கப் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அத்துடன் பாதாம் முந்திரி துண்டுகள், காய்ந்த திராட்சை, பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம், ஏலப்பொடி நாட்டு சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து  20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு இட்லி தட்டில் இட்லிகளாக வார்த்தெடுக்க ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி தயார்.

அவல்களாக கிடைக்கும் சிறுதானியங்களை பொடித்து இடியாப்பம், பிடி கொழுக்கட்டை, தோசை என வகை வகையாக செய்து கொடுக்கலாம். பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளை தவிர்த்து இம்மாதிரி சிறு தானியங்களை அடிக்கடி உணவில்சேர்த்து வர ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com