

வெள்ளை பூசணிக்காய் கூட்டு
தேவையானப் பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 1
வெள்ளை பூசணி – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த் துருவல் – ½ கப்
கசகசா & சோம்பு – தலா 1 ஸ்பூன்
பட்டை – சிறியது 1
பச்சை மிளகாய் – 4–5
பூண்டு – 4 பல்
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
அரைப்பதற்கான பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம்–தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் பூசணியை சேர்த்து வதக்கி, சிறிது நேரம் வேகவிடவும்.
அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இறுதியாக வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து, உப்பு சரிபார்த்து, மிதமான தீயில் கூட்டு பதத்திற்கு வரும் வரை சமைக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
வெள்ளை பூசணிக்காய் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
வெள்ளை பூசணி – 1 கப்
கெட்டித் தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த் துருவல் – ½ கப்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
வரமிளகாய் – 4
சிறிய தக்காளி – 1
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
கொத்தமல்லிவிதை – 1 ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
அரைக்க வேண்டிய பொருட்களை மென்மையாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தைச் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் பூசணியைச் சேர்த்து வதக்கி, அரைத்த கலவை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாக வந்ததும் கடைந்த தயிர், பெருங்காயத்தூள் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர் – 2 கப்
பொடியாக நறுக்கி வேக வைத்த பூசணிக்காய் – 1 கப்
நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்
நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
உடைத்த முந்திரிப்பருப்பு – 4
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
கடுகு & உளுத்தம்பருப்பு – தலா 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கார பூந்தி – ஒரு கைப்பிடி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வேகவைத்த பூசணிக்காய், உப்பு, இஞ்சி விழுது சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி, வதக்கிய கலவையை சேர்த்து, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து மேலே கார பூந்தி மிளகுத்தூள், சீரகத்தூள், தூவி பரிமாறவும்.