பனிக்காலப் பராமரிப்பும் வீட்டு உபயோகக் குறிப்புகளும்!

Home Use Note...
Winter season maintenance
Published on

னிக்கால காலை நேரத்தில் ஏற்படும் குதிகால் பிடிப்பு, கெண்டைக்கால் பிடிப்புக்கு நொச்சி இலையை வெந்நீரில் போட்டு சற்று நேரம் கழித்து அந்த தண்ணீரில் கை, கால்களில் ஊற்றி நீவி விட்டு கழுவ வலி மறைந்து இதம் தரும்.

சளி பிடித்ததால் ஏற்படும் மூக்கடைப்புக்கு மஞ்சளை நெருப்பில் சுட்டு அந்த புகையை சுவாசிக்க மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

பனிக்காலத்தில் ஏற்படும் கை மரமரப்பு, காது வலிக்கு சுக்கை, விளக்கெண்ணையில் உரைத்து அதனுடன் பூண்டு சாறு சேர்த்து கலந்து தடவினால் மரமரப்பு வலி குறையும்.

வாழைத்தண்டை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சுத்தப்படுத்தி மாவின் நடுவில் வைத்துவிட மாவு பொங்காமல், புளிக்காமல் இருக்கும்.

காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்றவற்றை வெந்நீரில் போடுவதைவிட உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட புழுக்கள் இருந்தால் வெளியாகிவிடும். வெந்நீரில் போட பூக்களிலேயே அவை தங்கிவிடும்.

தோசை மாவில், ஒரு பங்கு சிறுதானிய சேமியாவை சேர்த்து வெங்காயம், ப மிளகாய், கருவேப்பிலை இஞ்சி சீரகம் சேர்த்து கலந்து ஊற்ற சுவையான, சத்தான சிறுதானிய சேமியா தோசை கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கட்டி பெருங்காயத்தை தோசைக்கல்லில் சூடுபடுத்திக் கொண்டு அதை சட்டுவத்தால் அழுத்த நன்கு பொரிந்து வரும். அதை எடுத்து நுணுக்கி வைத்துக்கொள்ள வாசனையான பெருங்காயப்பொடி கெமிக்கலின்றி வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
சுவை கூட்டும் சமையல் வித்தைகள்… இதோ சில சமையல் குறிப்புகள்!
Home Use Note...

கேக், பிஸ்கெட் செய்ய முடியாதபோது கேக் தயாரிப்பையே பான் கேக் ஆக தோசைக்கல்லில் நெய் விட்டு தயாரிக்கலாம். பிஸ்கெட் தயாரிப்பு மாவை ரெடி செய்து ஆவியில் அல்லது சூடான மணலில் பாத்திரத்தை வைத்து வேகவிட்டு எடுக்க சூப்பராக இருக்கும்.

கிழங்கில் சிப்ஸ் போடுவதுபோல காய்கறிகளிலும் சிப்ஸ் போடலாம். காய்கறியை மெல்லியதாக நீளவாக்கில் சீவி பின் பொரித்து உப்பு, காரம், சாட் மசாலா தூவி பரிமாற குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

அதேபோல் உருளைக் கிழங்கு மசாலா வைத்து போண்டா போடுவதுபோல மஷ்ரூம், ஸ்டஃப்டு பனீர் போண்டா என தயாரிக்க சுவை நன்றாக இருக்கும்.

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்க கேரட், குடைமிளகாய், வேர்க்கடலை கொரகொரப்பாக பொடித்ததை தூவி கலந்து சுவைக்க சூப்பராக இருக்கும்.

ஃப்ரைடு ரைஸ் க்கு காய்கறிகள், முட்டை பொரியல் கலந்து தயாரிப்பதுடன் சோயா சங்க்ஸ், சோயா பால்ஸ்ம் சேர்த்து கலந்து செய்ய நன்றாக இருக்கும்.

உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்குடன் உப்பு சேர்த்து வேகவிட உடையாமல் பதமாக வெந்துவிடும்.

கேக், பிஸ்கெட் டப்பாவில் டிஷ்யூ பேப்பர் வைத்து ஆரஞ்சு தோலையும் வைக்க சுவை மாறாமல் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

பன்னீர், கிளிசரின், இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து இரவில் பாதத்தில் தடவிக்கொண்டு படுக்க பாதம் மென்மையாக இருப்பதோடு, வெடிப்பும் வராது.

ஊறவைத்த சப்ஜா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் சூடு தணியும். மலச்சிக்கல் ஏற்படாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com