உலக பருப்பு தின ரெசிபி - அரைத்து விட்ட பருப்பு சாம்பார்!

பருப்பு சாம்பார்!
பருப்பு சாம்பார்!www.youtube.com
Published on

ல்யாணம் என்றாலும், உறவினர் வீட்டுக்கு சென்றாலும் சமையலில் நிச்சயம் இடம்பிடிப்பது பருப்பு சாம்பார்தான். குழந்தைகள் முதலில் ருசி பார்ப்பதும் பருப்பு நெய் சோறுதான்.

பருப்பு என்பது உலர் பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற காய்களை தாங்கும் செடிகளில் உள்ள விதைகளைக் குறிக்கிறது. பல்வேறு வடிவங்களில் உள்ள இவற்றில் நார்ச்சத்து, புரதம், விட்டமின், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சமையல் துவங்கிய காலத்திலிருந்தே நமக்கு ஆரோக்கியமான உணவாக உள்ளது.

ஊட்டச்சத்து நிறைந்த இந்த பருப்பு வகைகளை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாக குழந்தை பருவத்தில் இருந்தே சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது. பருப்பு வகைகளின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக பருப்பு தினமாக ஐநா சபை 2018 ஆம் ஆண்டு அறிவித்தது. பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாளின் நோக்கமாகிறது. இந்த நாளில் நாமும் அரைத்து விட்ட பருப்பு சாம்பார் ரெசிபி பார்ப்போம்.

தேவையானவை:
துவரம்பருப்பு - 1 கப்
தக்காளி- 4
சின்ன வெங்காயம்- 10
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
சாம்பார் தூள்- 1 ஸ்பூன்
கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது தாளிக்க - கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு
எண்ணெய் - தாளிக்க
பெருங்காயம்- சிறிது
புளி - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

அரைப்பதற்கு -
தனியா- 2 ஸ்பூன்
மிளகு, சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
துருவிய தேங்காய்- 2 ஸ்பூன்
வரமிளகாய்  - 3

இதையும் படியுங்கள்:
வட இந்தியா ஸ்பெஷல் Dal Makhani செய்யலாம் வாங்க!
பருப்பு சாம்பார்!

செய்முறை:
துவரம் பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊறவைத்து சிறிது விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் இட்டு குக்கரில் நன்கு வேக விடவும் அரைப்பதற்கு என்று கொடுத்த பொருட்களை ஒரு கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் கடலை பருப்பு உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து, அதனுடன் மிளகு சீரகம், தனியா போட்டு வாசம் வரும்வரை சிவக்க வறுக்கவும். கூடவே  வரமிளகாய், இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து நன்கு ஆறவிட்டு அதை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

இப்போது ஒரு அகன்ற கனமான பாத்திரத்தில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,  கருவேப்பிலை போட்டு தாளித்து இரண்டாக அறிந்த வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி நறுக்கி வைத்துள்ள தக்காளிகளை போட்டு நன்கு வதக்கி அதனுடன் மசித்து வைத்துள்ள பருப்பை தண்ணீருடன் அப்படியே சேர்த்து அதில் சாம்பார்த்தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள இந்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதி வந்ததும் தேவையான உப்பு சிறிது புளித்தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதித்ததும் மேலே பெருங்காயம் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டு மூடவும்.


ஜோரான அரைத்துவிட்ட சாம்பார் ரெடி. இதில் தயார் செய்து வைத்துள்ள மெதுவடைகளைப் போட்டு ஊறியதும் சாப்பிட்டால் ஓட்டல் வடைக்கு ஏங்கமாட்டோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com