
தயிர் இட்லி ரெசிபி
இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1. ரவை 1 கப்; 2.தயிர் ½ கப்; 3.உப்பு ½ டீஸ்பூன்; ஈனோ ½ டீஸ்பூன்
ஸ்வீட் கர்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1.தயிர் 1 cup; 2.சர்க்கரை 1 டீஸ்பூன்; 3.உப்பு ½ டீஸ்பூன்
4.தண்ணீர் ¼ கப்
மற்ற பொருட்கள்:
1.எண்ணெய் 2 டீஸ்பூன்
2.கடுகு 1 டீஸ்பூன்
3.சீரகம் 1 டீஸ்பூன்
4.சன்னா டால் ½ டீஸ்பூன்
5.முந்திரி 2 டேபிள் ஸ்பூன்
6.உலர் திராட்சை 2 டேபிள் ஸ்பூன்
7.நறுக்கிய பச்சை மிளகாய் 2
8.நறுக்கிய இஞ்சி துண்டுகள் 1 டீஸ்பூன்
9.பெருங்காயம் 1 சிட்டிகை
10.கொத்தமல்லி இலை 2 டேபிள் ஸ்பூன்
11.சிவப்பு மிளகாய் தூள் ¼ டீஸ்பூன்
12. காரா பூந்தி 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மாவை தயார் பண்ணி, இட்லிகளை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஸ்வீட் கர்ட் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் மற்றொரு பாத்திரத்தில் போட்டு தயிரை கடைந்து வைத்துக்கொள்ளவும். மூன்றாவதாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி
எண்ணெயை ஊற்றவும். அதில் கடுகு, சன்னா டால், சீரகம் போட்டு மிதமான் தீயில் வறுக்கவும். கடுகு வெடித்ததும், முந்திரி, திராட்சை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். கலவை பொன்னிற மானதும் கடைந்து வைத்துள்ள ஸ்வீட் கர்ட்டுடன் கொட்டிக் கலக்கவும். பிறகு சிறிது ஆழமுள்ள தட்டில் இட்லிகளை வைத்து அதன் மீது ஸ்பைஸஸ் கலந்த தயிரை தாராளமாக ஊற்றவும்.
மேற்பரப்பில், சில்லி பவுடர், மல்லி இலை, காரா பூந்தி ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும். அனைவரும் விரும்பி உண்ணும் தயிர் இட்லி தயார்!! குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய சுவை மிக்க காலை உணவு இந்த தயிர் இட்லி.