சுண்டி இழுக்கும் சுவையில்... சும்மா நச்சுனு 2 ஊறுகாய்கள்

Pickles recipes
Pickles recipes
Published on

வீட்டில் காய்கறிகள் சமைக்காத போதும், குழம்பு இல்லாத போதும் உடனே ஊறுகாய் தான் தொட்டுக் கொள்ள பெஸ்ட் சாய்ஸ். இதில் உடனடியாக தயாரிக்கக்கூடிய ஊறுகாய் ரெசிபிகள்...

1. வெள்ளரிக்காய் ஊறுகாய்.

தேவையான பொருட்கள்.

வெள்ளரிக்காய் - 3

சர்க்கரை - 2 டீஸ்பூன்

வினிகர் - 1/2கப்

கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன்

வெள்ளரிக்காய் ஊறுகாய் செய்முறை.

வெள்ளரிக்காய் தோல் நீக்கியும், நீக்காமலும் போடலாம். சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பீங்கான் ஜாடியில் நறுக்கிய வெள்ளரி துண்டுகளை போட்டு, அதில் சர்க்கரை, வெள்ளை வினிகர், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெள்ளரி ஊறுகாய் ரெடி. வெள்ளரிக்காய் ஊறிய பின் உணவுடன் சாப்பிடலாம். இந்த ஊறுகாயை குளிர்ச்சியான பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

2. தக்காளி ஊறுகாய்.

தேவையான பொருட்கள்.

தக்காளி - 1/4 கிலோ

சிவப்பு மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

புளி -நெல்லிக்காய் அளவு

பூண்டு ஐந்து பற்கள்

வெந்தயம் -ஒரு டீஸ்பூன்

கடுகு -ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்

உப்பு -தேவைக்கு

கருவேப்பிலை -சிறிது

சிவப்பு மிளகாய் - ஐந்து

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

தக்காளி ஊறுகாய் செய்முறை

முதலில் தக்காளியை சுத்தமாக கழுவி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதில் புளியை போட்டு கரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து எடுக்கவும். கடுகையும் தனியாக வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் சேர்த்து, நறுக்கிய தக்காளியையும் போட்டு 5 நிமிடங்கள் வதத்தவும். இதில் கொதிக்க வைத்த புளிக் கரைசலை மசித்து பிழிந்து அதை தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த தக்காளி, புளிக்கரைசலை வடிகட்டி விட்டு மிக்ஸியில் பிளண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். இக்கலவையில் உப்பு , மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடித்த பொடியை கலந்து விடவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, இதில் உரித்த பூண்டு பல் சேர்த்து வதங்கியதும் அரைத்த தக்காளி புளிக் கரைசலை சேர்த்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சுண்டிய பின் இறக்கவும். ஆறியதும் ஜாடியில் வைத்து சாப்பிடலாம். சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி. பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
தொழிலாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகள்!
Pickles recipes

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com