RO Water Vs Can Water: எதுதான் பெஸ்ட்?

RO Water Vs Mineral Water
RO Water Vs Mineral Water
Published on

நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க நாம் தினசரி உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இதில் சரியான தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். இன்று நமக்குக் கிடைக்கும் மிகவும் பிரபலமான இரண்டு தண்ணீர் வகைகள் என்னவென்றால் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் தண்ணீர் (RO Water) மற்றும் கேன் தண்ணீர் (Mineral water). இந்த இரண்டு வகை தண்ணீருமே அவற்றின் நன்மை தீமைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பதிவின் மூலமாக இதில் எது சிறந்தது? என நாம் தெரிந்து கொள்ளலாம்.

RO தண்ணீர்: ரிவர்ஸ் ஆஸ்மோசீஸ் என்பது நீர் சுத்திகரிப்பு செயல்முறையாகும். இந்த செயல்முறையில் ஊடுருவக்கூடிய சவ்வு வழியாக நீரை அனுப்புவதன் மூலம் அதில் உள்ள அசுத்தங்கள் நீங்குகிறது. இதில் உலோகங்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கரைந்த திடப்பொருட்கள் போன்ற திங்கு விளைவிக்கும் பொருட்கள் நீக்கப்பட்டு மேம்பட்ட சுவையை அளிக்கிறது. இருப்பினும் இந்த செயல்முறையால் தண்ணீரில் அத்தியாவசிய தாதுக்களும் இல்லாமல் போகிறது. 

Mineral தண்ணீர்: கேன் தண்ணீர் அல்லது மினரல் வாட்டர், RO தண்ணீர் போலல்லாமல், எளிதாக மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதில் அத்தியாவசிய மினரல்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் இவை பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்படுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்குள் செல்லும் வாய்ப்புள்ளது. எனவே கேன் தண்ணீரை தேர்வு செய்யும்போது நல்ல பிராண்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். 

எது சிறந்தது?

இதற்கு உறுதியாக ஒரு பதிலை சொல்லிவிட முடியாது. RO தண்ணீர் தூய்மையை உறுதி செய்தாலும், அதில் அத்தியாவசிய தாதுக்கள் இல்லை. பாட்டில் தண்ணீர் வெளியே கொண்டு செல்ல வசதியாக இருந்தாலும் அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் சுகாதார பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் எந்த தண்ணீரை தேர்வு செய்யப் போகிறீர்கள் என்பது உங்களின் முக்கியத்துவம் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்ததாகும். 

இதையும் படியுங்கள்:
African Lungfish: 4 ஆண்டுகள் வரை உணவில்லாமல் வாழக்கூடிய அதிசய மீன்!
RO Water Vs Mineral Water

வீட்டில் எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட நீரை விரும்புபவர்களுக்கு RO அமைப்பு பொருத்தமாக இருக்கும். ஆனால் உங்கள் உணவுகளில் உடலுக்கு தேவையான தாதுக்களை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

மறுபுறம் எளிதாக வெளியே கொண்டு சென்று குடிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்னுரிமை அளித்தால், பாட்டில் தண்ணீர்தான் சிறந்த தேர்வு. ஆனால் இதில் நல்ல பிராண்டில் கவனம் செலுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com