
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாம் அனைவரும் திரவ உணவுகளையே அதிகம் விரும்புவோம். குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அவர்களுக்கும் எளிதாக வீட்டிலிருந்தே செய்து கொடுக்க பாப்ஸிக்கிள் சிறந்தது. சில பாப்ஸிக்கிள் வகைகளாக…
மேங்கோ பாப்ஸிகிள்
தேவையானவை:
பழுத்த மாம்பழத்தின் கூழ் இரண்டு கப், கன்டன்ஸ்ட் மில்க்-1/2கப், பாதாம், பிஸ்தா துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்.
மிக்ஸியில் அரைத்த மாம்பழக் கூழை பாத்திரத்தில் போட்டு அதனுடன் கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பாதாம், பிஸ்தா சீவலை இதனுடன் சேர்க்கவும். இதை பாப்ஸிக்கிள் மோல்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். ஒரு மணிநேரம் கழித்து நன்கு செட் ஆனவுடன் எடுக்கவும். சற்று நேரம் கழித்து மோல்டிலிருந்து எடுத்து சர்விங் பிளேட்டில் அடுக்கி பரிமாற சுவையாக இருக்கும்.
ஜெல்லி, காக்டெயில் ஃப்ரூட் பாப்ஸிக்கிள்
தேவையானவை:
தயாரித்து வைத்திருக்கும் கிரிஸ்டல் ஜெல்லி-இரண்டு கப் கலந்த பழக்கலவை-2கப், எசென்ஸ்-2துளிகள்.
செய்முறை:
கிரிஸ்டல் ஜெல்லியை கட் பண்ணி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நைசாக மசித்த பழக்கலவை, எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை பாப்ஸிக்கிள் அச்சில் ஊற்றி ஃ ஃப்ரிட்ஜில் வைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து வெளியில் எடுத்து சற்று நேரம் கழித்து மோல்டிலிருந்து எடுத்து பரிமாற சுவையாக இருக்கும்.
லெமன், மின்ட் நட்ஸ் பாப்ஸிக்கிள்:
தேவையானவை:
எலுமிச்சைசாறு -1கப், நட்ஸ், பொடித்தது-2கப், புதினா அரைத்தது-1/4கப், நாட்டுச் சர்க்கரை கரைத்தது-1/2கப். சுக்குப்பொடி அல்லது ஏலக்காய் தூள் 2பின்ச்
செய்முறை:
எலுமிச்சை சாறை, அரைத்து வடிகட்டிய புதினா சாறுடன் சேர்க்கவும். உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து பொடித்த நட்ஸ் பவுடரை சேர்த்து கலந்துகொள்ளவும். இதனுடன் கரைத்த நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு ஊற்றி கலந்து ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்து நன்கு கலந்து பாப்ஸிக்கிள் மோல்டில் ஊற்றி செட்டாக விடவும். நன்கு செட்டானவுடன் வெளியில் எடுத்து சற்று நேரம் கழித்து வெளியில் எடுத்து டிரேயில் வைத்து பரிமாற சுவையான மின்ட், லெமன் நட்ஸ் பாப்ஸிக்கிள் தயார்.