எளிமையாக செய்யலாம் இந்த சுவையான ப்ரெட் சில்லியை!

Bread chilli
Bread chilli

பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸாக இந்த ப்ரெட் சில்லியைச் செய்துக் கொடுங்கள். திருப்தியாகவும் சுவையாகவும் இருக்கும். அதேபோல் நீங்களும் இதனை எளிமையான முறையில் செய்துவிடலாம்.

தேவையானப் பொருட்கள்:

  • ப்ரெட் துண்டுகள் ( 6 முதல் 8 )

  • ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள்

  • 1 கேரட்

  • பட்டாணி

  • சோளம்

  • 2 தக்காளி

  • 2 பச்சை மிளகாய்

  • 1 வெங்காயம்

  • 1 தேக்ககரண்டி இஞ்சி பூண்டு விழுது

  • ½ தேக்கரண்டி சோயா சாஸ்

  • ½ தேக்கரண்டி தக்காளி சாஸ்

  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் சாஸ்

  • 1 தேக்கரண்டி வினிகர்

  • 1 தேக்கரண்டி சர்க்கரை

  • 1 தேக்கரண்டி மிளகு தூள்

  • உப்பு

  • 2 தேக்கரண்டி எண்ணெய்

  • கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

ப்ரட்டின் நான்கு பக்கமும் இருக்கும் பழுப்பு நிறத்தை நீக்கிவிட்டு கட்டை விரல் அளவில் சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அந்த ரொட்டித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் மாற்றி மிதமானச் சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

மிளகாய்த்தூள், கேரட், பட்டாணி, சோளம் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும்.

மற்றொருப் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் நறுக்கிய வெங்காயத்தை மட்டும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அந்த கேரட் கலவையைச் சேர்த்து மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாக மாறும் வரை வதக்கிவிட்டு, தக்காளி கெட்சப், சோயா சாஸ், சிவப்பு மிளகாய் சாஸ், வினிகர், சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். இவையனைத்தையும் அடுத்தடுத்துச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும்.

இதையும் படியுங்கள்:
ரவா உப்புமாவிற்கு No சொல்பவர்களுக்கு, ரவா பொங்கல் செய்துக்கொடுங்கள்!
Bread chilli

இப்போது வறுத்த பிரட் துண்டுகளை அதனுடன் சேர்க்க வேண்டும். சாஸ், காய்கறிகள் அனைத்தும் பிரட் துண்டுகளுடன் சேரும் வரைக் கிண்டிவிடவும். கிண்டிவிட்ட பின் 2 அல்லது 3 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லியைத் தூவி அடுப்பை நிறுத்திவிடவும்.

நீங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளைப் பயன்படுத்தினாலே போதும், இந்த காய்கறிகள் மட்டும்தான் சேர்க்க வேண்டுமென்ற எந்த விதிகளும் இல்லை. அதேபோல் சாஸ் இல்லையென்றாலும் அதற்கேற்றவாரு சரிசெய்துக்கொள்ளலாம். முக்கியமான பொருள்களைத் தவிர்த்து மற்ற பொருட்களை உங்களிடம் இருப்பதை வைத்தே சரிசெய்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com