சீப்பு சீடை செய்யலாம் வாங்க....!

சீப்பு சீடை செய்யலாம் வாங்க....!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அரிசி மாவு – 1 கப்

உளுத்தம் மாவு – 1/4 கப்

கடலை மாவு – 1/4 கப்

கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சுடுநீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெது வெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் கூட கொஞ்சம் சுடுநீரை ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மொறு மொறுப்பாக சீப்பு சீடை ரெடி!

logo
Kalki Online
kalkionline.com