சுவையான இனிப்பு சீடையும், முட்டை காளானும் செய்யலாம் வாங்க!

இனிப்பு சீடை
இனிப்பு சீடைImage credit - youtube.com

ந்தப் பதிவில் சுவையான இனிப்பு சீடை மற்றும் முட்டை காளான் பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த சுவையான ரெசிபியை எப்படி சுலபமாக செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.

இனிப்பு சீடை செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி மாவு-1 கப்.

வெள்ளை எள்-1 தேக்கரண்டி.

தேங்காய்-1 கப்.

உளுத்தம் பருப்பு மாவு-1 கப்.

நெய்-1 தேக்கரண்டி.

வெல்லம்-1 கப்.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

எண்ணெய்- தேவையான அளவு.

இனிப்பு சீடை செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் வறுத்த பச்சரிசி மாவு 1 கப், வறுத்த வெள்ளை எள் 1 தேக்கரண்டி, தேங்காய் 1கப், வறுத்த உளுந்தம் மாவு 1கப், நெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 1 கப் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வெல்லம் கரைந்து வந்ததும் நன்றாக நூரை பொங்கும் போது ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி, 1 சிட்டிகை உப்பு ஆகியவை சேர்த்து இறக்கி விடவும். இப்போது அந்த வெல்லக்கரைச்சலை வடிக்கட்டி அதை மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக சாப்பாத்திமாவு பதத்திற்கு உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பிறகு 30 நிமிடம் மாவை ஊறவைத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி அடுப்பில் எண்ணெய் சூடான பிறகு அதில் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான இனிப்பு சீடை தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டில் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

முட்டை காளான் செய்ய தேவையான பொருட்கள்;

முட்டைகோஸ்-1கப்

காளான் -2 கப்

வெங்காயம்-1

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.

மைதா-1/2 கப்.

சோளமாவு-1 தேக்கரண்டி.

கடலை மாவு-1 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

குழம்புக்கு,

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

சோயா சாஸ்-1 தேக்கரண்டி.

சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.

தக்காளி சாஸ்-1 தேக்கரண்டி.

சோளமாவு-1 தேக்கரண்டி.

முட்டை -1

கொத்தமல்லி- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

முட்டை காளான் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1கப், பொடியாக நறுக்கிய காளான் 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் ½ தேக்கரண்டி, கரம் மசாலா ¼ தேக்கரண்டி, மைதா ½ கப், சோளமாவு 1 தேக்கரண்டி, கடலை மாவு 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் நன்றாக பிசைந்தால் பஜ்ஜிமாவு பதத்தில் வரும். அதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து வைத்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ‘அவியல்’ மற்றும் ‘கோவக்காய் ஃப்ரை’ செய்யலாம் வாங்க!
இனிப்பு சீடை

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா ¼ தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ¼ தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். இப்போது அதில் சோயா சாஸ் 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி, சில்லி சாஸ் 1 தேக்கரண்டி சேர்த்து சோளமாவு 1 தேக்கரண்டியை ¼ கப் தண்ணீரில் கரைத்து அதையும் சேர்த்து கொதிக்கவிட்டால் குழம்பு ரெடி.

இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை 1 பொரித்து அத்துடன் ஒரு கரண்டி குழம்பு ஊற்றி பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் காளானை சேர்த்து இப்போது எல்லாவற்றையும் கலந்து ஒரு பவுலில் வைத்து மேலே வெங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான ரோட்டு கடை முட்டை காளான் தயார். இதை நீங்களும் ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com