முட்டை இல்லாத சாக்லேட் லாவா கேக் செய்யலாம் வாங்க!

Eggless chocolate lava cake.
Eggless chocolate lava cake.

ஸ்பூன் வைத்து வெட்டியதும், சாக்லேட் உருகி வழியும் லாவா கேக்குகளை யாருக்குதான் பிடிக்காது?. லாவா கேக்குகளின் செய்முறையை பல இடங்களில் நீங்கள் படித்திருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம். ஆனால் இந்த பதிவில் முட்டை இல்லாமல் லாவா கேக் எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். "அட, உண்மைதாங்க. இந்த கேக் செய்ய முட்டை தேவையில்லை". 

சாக்லேட் லாவா கேக் அல்லது உருக்கிய லாவா கேக் என்பது, கேக்கின் மையப்பகுதியில் உருகிய நிலையில் சாக்லேட் இருக்கும் அவ்வளவுதான். இதன் செய்முறையில் பொதுவாகவே முட்டைகளைப் பயன்படுத்தி, அவனில் சுட்டெடுப்பார்கள். இதனால் கேட்கின் உள்ளே இருக்கும் சாக்லேட் உருகி, லாவா பகுதி ஏற்படுகிறது. லாவா என்றால் எரிமலை குழம்பு என அர்த்தம். எப்படி சுற்றி இருக்கும் கடினமான பாறைகளுக்கு மத்தியில் எரிமலைக் குழம்பு இருக்கிறதோ. அதேபோல இந்த கேக்குக்கு மத்தியில் சாக்லேட் இருக்கும். 

இந்த கேக்கில் முட்டையைப் நாம் பயன்படுத்தாததால், அதற்கு பதிலாக வேறு சில பொருட்களை நாம் சேர்க்க வேண்டும். இணையத்தில் நீங்கள் தேடிப் பார்த்தால் பல சமையல் குறிப்புகளில், ஒரு துண்டு சாக்லேட்டை மாவின் மையத்தில் வைத்து செய்வதுபோல் காட்டுவார்கள். ஆனால் இப்படி நான் பலமுறை செய்திருக்கிறேன், ஒருமுறை கூட நான் நினைத்ததுபோல லாவா பகுதியை என்னால் அடைய முடியவில்லை. பெரும்பாலான நேரங்களில் சாக்லேட் கடினமாகவே இருக்கிறது அல்லது அதிகம் மென்மையாகி லாவா வெளியே வழிந்து ஓடுகிறது. 

இதற்காகவே நான் ஒரு எளிய செயல் முறையை கண்டுபிடித்தேன். அதில் சாக்லேட் மற்றும் கிரீமைப் பயன்படுத்தி, அடர்த்தியான மாவை உருவாக்கி, எதிர்பார்த்த லாவா கேக்கை சரியான பதத்தில் உருவாக்கலாம். 

  1. முதலில் சாக்லேட் மற்றும் கிரீமை உருக்கி பிரிட்ஜில் வைத்து விடவும். அது ஓரளவுக்கு கடினமானதும் சிறுசிறு பந்துகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

  2. அதன் பிறகு கேக் மாவு தயாரிக்க,  1 கப் மைதா மாவு மற்றும் சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர், பால், உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இது அதிக கெட்டித்தன்மை இல்லாமல், இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். 

  3. தயாரித்த கேக் மாவை வெண்ணை தடவிய கப்பில் ஊற்றி, நடுவில் முதலில் தயாரித்த சாக்லேட் பந்துகளைப் போட்டுவிடவும். பின்னர் இதை எடுத்து அப்படியே மைக்ரோவேவ் அவனில் சுட்டு எடுத்தால், சுவையான முட்டை இல்லாத லாவா கேக் ரெடி. 

லாவா கேக் சுவையாக இருப்பதற்கு நல்ல தரமான சாக்லேட்டைப் பயன்படுத்தவும். இதை முயற்சித்துப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தை தவறாமல் பதிவிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com