
சாத போண்டா
தேவை:
பழைய சாதம் - 6 கப்
உளுந்தம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மல்லித்தழை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஊறவைத்து, நீரை முழுவதும் வடித்துவிட்டு, கெட்டியாக அரைத்து, சாதத்துடன் கலந்து, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மல்லித்தழை சேர்த்து பிசையவும். பின்னர் வாணலியில் காய்ந்த எண்ணெயில், பிசைந்த கலவையை போண்டாக்களாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்தால், சுவையான சாத போண்டா தயார்.
சாதம் தோசை
தேவை:
மீந்த சாதம் - 6 கப்
மைதா மாவு, ரவை - தலா அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரவை மைதா மாவு இரண்டையும் வாணலியில் போட்டு வறுக்கவும். பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்க்கவும். கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், உப்பு பச்சை மிளகாயை வதக்கி, மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து, இந்த மாவை தோசைகளாக வார்க்கவும்.
சாதம் முறுக்கு
தேவை:
மீந்த சாதம் - 4 கப்,
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன் கப்,
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலை மாவை மீந்த சாதத்துடன் சேர்த்து, மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு கலந்து, கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால், மொறு மொறு சாத முறக்கு தயார்.
சாதம் வடகம்
தேவை:
மீந்த சாதம் - 6 கப்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சை மிளகாயுடன் உப்பு கலந்து அரைத்து, சாதத்தில் கலந்து, சீரகம் சேர்த்து பிசையவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பிசைந்த கலவையை உருட்டி, தட்டி தட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால், சுவையான சாத வடகம் தயார்.