பொதுவாகவே பால் பொருட்கள் உடல் நலத்துக்கு நல்லது. அதில் மதிப்புக்கூட்டப்பட்ட பன்னீர் எனப்படும் பாலாடைக்கட்டி அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதில் பெருமளவு கால்சியம் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் நரம்பு மண்டலம் சீராக செயல்படவும், இதயத்தின் தசைகள் ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது.
இதோ உங்களுக்காக பன்னீர் குருமா ரெசிபி படிப்படியாக இங்கே...
தேவை:
பால் ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழம் ஒன்று
தயிர் - ஒரு கப்
பன்னீர்
செய்முறை:
நீர் கலக்காத பால் நன்றாக கொதித்ததும் தயிர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து திரிய வைக்கவும். திரிந்த பாலின் கெட்டிப் பகுதியை ஒரு சுத்தமான துணியில் போட்டுக் கட்டித் தொங்கவிட்டு வடிகட்டவும். துளி நீரின்றி நன்றாக வடிந்த பின் கிடைக்கும் கெட்டியான பன்னீரை ஒரு பலகையில் வைத்து அமுக்கி சிறு சதுரங்களாக வெட்டவும். பன்னீர் ரெடி.
இந்த குருமாவில் போட அவற்றை எண்ணெயில் பொரித்து சிவக்க எடுத்து வைக்கவும். அல்லது பன்னீரை நன்றாக உதிர்த்தும் குழம்பில் போடலாம்.
அரைக்கத் தேவையானவை;
மிளகாய் -ஆறு
பூண்டு -ஐந்து பற்கள்.
மிளகு -ஒரு டீஸ்பூன்
-கசகசா ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -ஒன்று
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும் .
வறுத்துப் பொடிக்க;
பட்டை 2துண்டு
கிராம்பு -4
சோம்பு - சிறிது
ஏலக்காய்- 3
இவற்றை சிறிதீயில் வறுத்து ஆறியதும் மிக்சியில் தூளாக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய்த் துருவல் 1 கப் (அரைமூடி) அரைத்து பால் வடிகட்டி முதல் பால் இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.
தாளிக்க;
தேவை;
சீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு -கால் கிலோ வெங்காயம் - இரண்டு பெரியது
தக்காளி -நான்கு
முந்திரி பருப்பு - எட்டு
பொட்டுக்கடவை மாவு- 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு தேக்கரண்டி அரைத்த பொட்டுக்கடலை மாவை முதல் தேங்காய் பாலில் சேர்த்து தனியாக கரைத்து வைக்கவும் . அடிகனமான வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு சிறிது சோம்பு, சீரகம் போட்டு தாளித்து அரைத்த மசால் விழுதை போட்டு நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் பொடியாக வெட்டிய வெங்காயத் தையும் தக்காளியையும் சிவக்க வதக்கவும். உருளைக் கிழங்குகளை சிறிய சதுரமாக வெட்டி போட்டு வதக்கி இரண்டாவது தேங்காய் பாலை கலந்து தூள் செய்த கரம் மசாலா பொடி, மிளகாய்ப்பொடி இவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் கலந்து வேகவைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றவும். இத்துடன் பொடித்த முந்திரி பருப்பு ஏற்கனவே கரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவு கலவை ஆகியவற்றை கலந்து பொரித்து வைத்துள்ள பன்னீரையும் குருமாவில் போட்டு 10 நிமிடம் சிறு தீயில் வைத்திருக்கவும். இறக்கும்போது நறுக்கிய மல்லி தலைகளுடன் பரிமாறவும். பொட்டுக்கடலை மாவு கெட்டித்தனமா தரும் என்பதால் கவனம்.
இதில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக பட்டாணிகளை பச்சை பட்டாணியும் வேகவைத்து சேர்க்கலாம் அல்லது இரண்டையும் கலந்து செய்யலாம். இந்த பன்னீர் குருமா சப்பாத்தி பரோட்டா பூரி போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
செய்வதற்கு சற்று நேரம் ஆனாலும் ரிச்சான இந்த பன்னீர் குருமாவை வீட்டு ருசியில் செய்து உண்ட திருப்தி இருக்கும்.