மன அமைதிக்கான சில வழிமுறைகள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

னிதர்கள் அனைவரும் மனதார விரும்புவது 'அமைதி'. ஒரு நிமிடம் மனஅமைதியை இழப்பது என்பது அறுபது வினாடிகள் மனஅமைதியின்றி அல்லல்படுவதே. மகிழ்வான வாழ்விற்கும் மனஅமைதியுடன் வாழ்நாளைக் கழிப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. 

அச்சம், கவலை, மன அழுத்தம், பரிதவிப்பு முதலியன இல்லாது நிறைவுடன் மனம் இருப்பதே மன அமைதி. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அமைதி போன்று சில நேரங்களில் நாம் மனஅமைதியை விழித்திருக்கும் போதும் அனுபவிக்கின்றோம். மிகவும் பிடித்தமான நண்பர்களுடன் பொழுதைச் செலவிடும் போதும், நீண்ட காலம் எதிர்பார்த்த ஒன்றை அடையும் போதும், மகிழ்வு தரும் புத்தகங்கள் வாசிக்கும் போதும், குழந்தைகளுடன் விளையாடும் போதும், எந்த வேலைப் பளுவும் இன்றி ஓய்வு எடுக்கும் போதும் மனம் அமைதியுடன் இருக்கிறது. 

ஒரு சில வழிகளைப் பின்பற்றினால், நாம் நம் வாழ்வில் மனஅமைதியைத் தொடச்சியாக அனுபவிக்க முடியும்.  பதட்டம் அடையவதையும், மனஅழுத்தம் அடைவதையும் தவிர்க்க முடியும். வாழ்வில் சோதனைச் காலங்களில் நேர்மறையாகச் சித்திக்க பழகுவதன் மூலமாகவும், எதிர்மறை சித்தனைகளால் மனதைக் காயப்படுத்தாமல் இருப்பதன் மூலமாகவும் மனஅமைதியை வாழ்வில் தொடர்ந்து அனுபவிக்க முடியும், மனஅமைதி அடைய பெரிய செல்வந்தராகவோ, சுற்றுத் தேர்ந்த அறிஞராகவோ, பிரபல வல்லுநராகவோ இருக்க வேண்டியதில்லை. எல்லா நிலையில் உள்ளவர்களும் தங்கள் வாழ்வில் மனஅமைதியைக் காணலாம். 

எதிர்மறை உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒத்த கருத்து இல்லாத நபர்களுடன் சொற்போர் நடத்துவது மனஅமைதியைக் கெடுக்கும் சக்தி படைத்தது. 

மன்னிக்கும் பழக்கத்தையும், மறக்கும் பண்பையும் பழக வேண்டும். தவறான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளா திருக்கவும் அவ்வுணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து விடுபடவும் இது உதவும். மன்னிப்பது, மனஅழுத்தத்தை மாற்றி மன நிம்மதியை வரவழைக்கும்.

மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் பழக்கத்தை அடியோடு விட்டுவிடுங்கள். எல்லாத் திறன்களையும் ஒருங்கே பெற்றவர்கள் எவரும் இல்லை. அதைப்போல் நம்மைவிட திறமை வாய்ந்தவர்களும், திறமை குன்றியவர்களும் சமுதாயத்தில் வலம் வரத்தான் செய்கின்றனர். தம் சுயமரியாதையை வளர்ப்பதன் மூலம் பொறாமைக்கு விடை தர முடியும்.

மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். நம் சக்திக்கு அப்பாற்பட்டவை குறித்துக் கவலை கொள்வது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. ஏற்றுக்கொள்வதன் மூலம் நேரம். உழைப்பு, சிந்தனை ஆகியன வீண் போவது தடுக்கப் படும். மனம், தன்னால் இயலாதது குறித்தும் கவலைப்படாது.

கடந்த கால நினைவுகள் குறித்து மீண்டும் மீண்டும் சிந்தனை செய்து மனதை வீண் விரக்திக்கு ஆளாக்க வேண்டாம். கடந்தவை கடந்ததாகி விட்டது. அவை செல்லாக் காசே. அவற்றை மாற்ற முடியாது. கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தின் மீது அக்கறை காட்டுங்கள். விரும்பத்தகாத நினைவுகளை முயற்சி செய்து அப்புறப்படுத்தி, அத்தருணங்களில் வாழ்வில் நிறைவும் ஏற்றமும் தந்த எண்ணங்களால் நிரப்ப வேண்டும்.

குடும்பத்தினர், சகபணியாளர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியவர்களே நம் உலகம். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது மனஅமைதி தொடர்வதின் மற்றொரு முக்கிய இரகசியம். அவ்வாறு ஏற்றுக்கொள்ள தவறுதல் தேவையற்ற மனஅழுத்தத்தையே கொண்டு வரும்.

இதையும் படியுங்கள்:
கோண புளியங்காய் Alias கொடுக்காய்ப்புளி... இது என்னென்ன பண்ணும் தெரியுமா?
Motivation article

மனதை ஒருமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும். எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து தேவையற்றவைகளை மனதில் இருந்து அப்புறப் படுத்துங்கள் கவலைகள் சோர்வுகள் தாழ்வுகள் பாதிப்புகள் ஆகியன குறித்து சிந்தித்து அவற்றை குறித்து மனதிற்கு அழுத்தம் தருவதை தவிர்த்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மன அமைதியை காத்திடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com