மொறு மொறு பொரி உருண்டை செய்யலாம் வாங்க!

பொரி உருண்டை...
பொரி உருண்டை...

பொரி உருண்டை நம்முடைய பாரம்பரியமான இனிப்பு பண்டமாகும். இதை கார்த்திகை தீபத்தின்போது  வீடுகளில் செய்வார்கள். அதோடு, நெல் பொரி, அவல் பொரி என கடவுளுக்கு படைப்பார்கள். பொரி உருண்டை மொறு மொறு வென்று சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதனால் 90ஸ் கிட்டின் ஃபேவரைட் இனிப்பு பண்டமாக பொரி உருண்டை இன்னமும் இருக்கிறது. அத்தகைய பொரி உருண்டையை சட்டுன்னு செஞ்சிடலாம் வாங்க.

பொரி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

வெல்லம் -1கப்.

பொரி- 4கப்.

தண்ணீர்-1/2 கப்.

நெய்-2 தேக்கண்டி.

உப்பு-1சிட்டிகை.

ஏலக்காய் தூள்- ¼ தேக்கரண்டி.

பொரி உருண்டை செய்முறை விளக்கம்:

ரு பவுலில் 4கப் பொரியை எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது ஒரு ஃபேனில் ஒரு கப் வெல்லம் அத்துடன் ½ கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைய விடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை ஒரு ஃபேனில் வடிக்கட்டி அதனுடன் 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து விட்டு ஃபேனை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

முதலில் பாகு கொஞ்சம் தண்ணியாக நுரைத்து வரும். பிறகு நன்றாக சூடு பண்ணும்போது கெட்டியாகத் தொடங்கும். 5 நிமிடம் அடுப்பில் வைத்து கிண்டவும். பாகை தண்ணீரிலே போடும் போது கரையாமல் கல்லு மாதிரி இருக்க வேண்டும். அந்த பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அதில் வாசனைக்காக ஏலக்காய் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து கிளறிவிடவும்.

இதையும் படியுங்கள்:
இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள் தெரியுமா?
பொரி உருண்டை...

இப்போது ஏற்கனவே பவுலில் வைத்திருக்கும் 4கப் பொரியை அத்துடன் சேர்த்து விடவும். பொரியை சேர்த்த உடன் நன்றாக கிளறி விடவும். எல்லா பொரியிலும் வெல்ல பாகு நன்றாக ஒட்ட வேண்டும்.

இப்போது கைகளில் கொஞ்சம் அரிசி மாவை தேய்த்து கொண்டு பொரியை உருண்டை உருட்டுங்கள். அப்போதுதான் கைகளில் ஒட்டாமல் ஈஸியாக உருட்ட முடியும். பிறகு காத்து புகாத கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து கொள்ளலாம் சீக்கிரம் கெட்டு போகாமல் இருக்கும். பசிக்கும்போது எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் இது ரொம்ப பிடிக்கும். ரொம்ப சீக்கிரமாக, சிம்பிளாக செய்து முடிச்சிடலாம். அவ்வளவுதான் வீட்டிலேயே சட்டுன்னு செய்த பொரி உருண்டை தயார். நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com