இந்தப் பதிவில் சுவையான ரைஸ் பகோடா மற்றும் சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த சுவையான ரெசிபியை எப்படி சுலபமாக செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.
ரைஸ் பகோடா செய்ய தேவையான பொருட்கள்:
சாதம்-2கப்.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி-சிறுதுண்டு.
கருவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.
ஜீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
கடலை மாவு-1/2 கப்.
அரிசி மாவு-1/4 கப்.
எண்ணெய்- தேவையான அளவு.
ரைஸ் பகோடா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பெரிய பவுலில் 2 கப் சாதம், பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, இஞ்சி சிறுதுண்டு, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேகக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி, ஜீரகத்தூள் ½ தேக்கரண்டி, பெருங்காயத்தூள் ¼ தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி, கடலை மாவு ½ கப், அரிசி மாவு1/4 கப் ஆகியவற்றை கலந்து விட்டு கொண்டு 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு இவற்றை நன்றாக உருண்டை பிடித்து வைத்து அடுப்பில் எண்ணெய்யை நன்றாக கொதிக்கவிட்டு இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது மிகவும் சுவையான ரைஸ் பகோடா தயார். நீங்களும் வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் செய்யத் தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட்-200 கிராம்.
கஸ்டர்ட் பவுடர்-2 தேக்கரண்டி.
பால்-500ml.
கன்டன்ஸ்டு மில்க்-100 கிராம்.
சாக்லேட் சிப்ஸ்- தேவையான அளவு.
சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் செய்முறை விளக்கம்:
முதலில் டார்க் சாக்லேட்டை சிறிது சிறிதாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடரை சிறிது பால் ஊற்றி நன்றாக கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பால் 500ml எடுத்து அடுப்பில் காய்ச்சி அத்துடன் 100ml கன்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து நன்றாக காய்ச்சவும் இப்போது அதில் வெட்டி வைத்திருந்த டார்க் சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கஸ்டர்ட் மில்க்கை இதில் சேர்த்து நன்றாக கட்டியாகும் வரை கிண்டவும். இப்போது இதை ஒரு கிளேஸ் டம்ளரில் மாற்றி அதற்கு மேல் சாக்லேட் சிப்ஸை தூவி பிரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான சாக்லேட் கஸ்டர்ட் புட்டிங் தயார். நீங்களும் வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.