One pot recipe: நொய் அரிசி உப்புமா மற்றும் முருங்கைக்காய் சாதம் செய்யலாம் வாங்க!

நொய் அரிசி உப்புமா
நொய் அரிசி உப்புமாImage credit - youtube.com
Published on

ற்போது One pot recipe மிகவும் பிரபலமாகி வருகிறது என்றே சொல்லலாம். எப்போதும் பரபரப்பாக நேரமே இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கும், பேச்சுலர்ஸ்க்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். எல்லா பொருட்களையும் ஒரே பாத்திரத்தில் வைத்து செய்து விடுவதால், உணவும் பிளேவராக இருக்கும், செய்வதும் மிகவும் சுலபம். அத்தகைய One pot recipes பற்றித்தான் இந்த பதிவில் காணவுள்ளோம்.

நொய் அரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்;

கடுகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4

பூண்டு-10

தக்காளி-3

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

நொய்-1 டம்ளர்.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

நெய்-2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

நொய் அரிசி உப்புமா செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றிவிட்டு அதில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொள்ளவும். இதில்1 தேக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு நன்றாக பொரிந்து வந்ததும் 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது அத்துடன் 4 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இப்போது சாதத்திற்கு தேவையான உப்பு, பூண்டு 10, பொடியாக நறுக்கிய தக்காளி 3, மஞ்சள் பொடி ½ தேக்கரண்டி, 1 டம்ளர் ஊற வைத்த நொய் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். கடைசியாக கருவேப்பிலை தூவி குக்கரை மூடி 4 விசில் விட்டு வேக வைத்து திறந்தால் சூப்பரான நொய் அரிசி உப்புமா தயார். நீங்களும் வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

முருங்கைக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்;

கடுகு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

வெங்காயம்-2

தக்காளி-1

தனியா தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.

குழம்பு மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

எண்ணெய்- 1 குழிக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

நெய்-1 தேக்கரண்டி.

முருங்கைக்காய்-2

அரிசி-1 டம்ளர்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ‘அவியல்’ மற்றும் ‘கோவக்காய் ஃப்ரை’ செய்யலாம் வாங்க!
நொய் அரிசி உப்புமா

முருங்கைக்காய் சாதம் செய்முறை விளக்கம்;

முதலில் குக்கரில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி விட்டு 1 தேக்கரண்டி கடுகு போட்டு வெடித்த பிறகு 1 தேக்கரண்டி ஜீரகம், 4 வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். ½ தேக்கரண்டி தனியா தூள், ½ தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள்  முருங்கக்காய் 2 சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இப்போது 1 டம்ளர்  ஊறவைத்த அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 1 தேக்கரண்டி நெய் விட்டு கருவேப்பிலை சிறிது தூவி குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுத்தால் சுவையான முருங்கைக்காய் சாதம் தயார். இந்த சாதத்துடைய சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com