பருப்பு காரதோசை
பருப்பு காரதோசைwww.youtube.com

டிபனுக்கு செய்யலாம் சூப்பரான பருப்பு காரதோசை!

டிபனுக்கு எப்பப் பாரு இட்லி தோசையேவா? என்று கேட்பவர்கள் உண்டு. வித்தியாசமான தோசைகளை எப்படி செய்வது என்று யோசிப்பவர்களும் உண்டு. அவர்களுக்காக இதோ காரசாரமான பருப்பு தோசை!

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 3 டம்ளர்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் வெந்தயம் -ஒரு டீஸ்பூன்
பச்சரிசி - ஒரு கைப்பிடி
துவரம் பருப்பு - 1 1/2 டம்ளர்
வரமிளகாய் - 10
உப்பு - தேவைக்கு
பெருங்காயம்  - சிறிது
பூண்டு -8 பற்கள்
புளி -  சிறு நெல்லிக்காய் அளவு
தேங்காய் - துருவியது ஒரு கப்
சின்ன வெங்காயம் உரித்தது  -ஒரு கப்
கடுகு கறிவேப்பிலை- தாளிக்க

செய்முறை:
ளுத்தம் பருப்பு, வெந்தயம், துவரம் பருப்பு  ஆகியவற்றை இட்லி அரிசியுடன் ஊறவைத்து (3மணி நேரம்)  நன்கு கழுவி சிறிது அரிசி, அதனுடன் வரமிளகாய்களை போட்டு அரைத்ததும் மீதி அரிசியையும் ஒன்றாகப் போட்டு ஆட்டவும். முக்கால்வாசி அரைத்ததும் அதில் உரித்த பூண்டு, புளி, உப்பு பெருங்காயம் சேர்க்கவும். எடுக்கும் தருணத்தில் இரண்டாக அரிந்த சின்ன வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து சற்று கொர கொரப்பாக எடுக்கவும்.

இதை அரைத்து முடித்தவுடன் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். (ஊறவைத்த கடலைப்பருப்பும் போடலாம்). இதை அப்படியே இரண்டு மணி நேரம் வைத்து புளிப்பதற்கு முன்பே தோசையாக வார்த்து சாப்பிடலாம்.  தோசைக்கு நல்லெண்ணெய் விட்டு சுட்டால் மணமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
டெஃப் என்றால் என்ன தெரியுமா?
பருப்பு காரதோசை

இதற்கு தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். மழை காலத்துக்கும் குளிர்காலத்துக்கும் ஏற்ற சூப்பர் சுவையில் பருப்பு கார தோசை உடலுக்கும் சத்தானது.

(காரம் தேவைப்படுபவர்கள் மட்டும் காரம் சேர்த்துக் கொள்ளலாம். காரம் குறைவாக தேவைப்படுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் வர மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.)

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com