சூப்பர் டேஸ்டியான முருங்கைக்கீரை வடை-மக்ரூன் செய்யலாம் வாங்க!

drumstick  vadai - macaroons!
healthy recipesImage credit - youtube.com
Published on

ன்றைக்கு டேஸ்டியான முருங்கைக்கீரை வடை மற்றும் தூத்துக்குடி மக்ரூன் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

முருங்கைக்கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்;

கடலை மாவு-1 ½ கப்.

வெங்காயம்-1

சீரகம்-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-2

முருங்கைக்கீரை-1 கைப்பிடி.

கருவேப்பிலை-1 கொத்து.

உப்பு-தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

முருங்கைக்கீரை வடை செய்முறை விளக்கம்;

முதலில் ½ கப் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். இப்போது இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, முருங்கைக்கீரை 1 கைப்பிடி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். கடைசியாக கருவேப்பிலை 1 கொத்து சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் வடையை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி அது காய்ந்த பிறகு, வடை மாவை சிறிது எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணெய்யில் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் இந்த மழைக்கு சுவையான முருங்கைக்கீரை வடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மக்ரூன் செய்யத் தேவையான பொருட்கள்:

முட்டை-2

சர்க்கரை பவுடர்-1/2 கப்.

முந்திரி-1/2 கப்.

வெண்ணெய்-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான பீட்ரூட் இடியாப்பம்-முருங்கை அடை செய்யலாமா?
drumstick  vadai - macaroons!

மக்ரூன் செய்முறை விளக்கம்;

முதலில் பவுலில் 2 முட்டையுடைய வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இப்போது அதை நன்றாக பீட் செய்யவும். இதில் சர்க்கரை பவுடர் ½ கப் சேர்க்க வேண்டும். மொத்தமாக அப்படியே சேர்க்காமல், கொஞ்சம் கொஞ்சமாக பீட் செய்துவிட்டு போடும்போது நன்றாக நுரைத்து க்ரீமியாக வரும். இப்போது இதில் 1/2 கப் கொரகொரப்பாக அரைத்த முந்திரியை சேர்த்து கலைந்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது இந்த கலவையை பைப்பிங் பேக்கில் போட்டு ஒரு தட்டில் வெண்ணெய் சிறிது தடவிவிட்டு அழகாக வரிசையாக. மக்ரூன்போல அதன் வடிவத்தில் போட்டுவிட்டு அவனில் 100 டிகிரி செல்சியசில் 1 ½ மணி நேரம் பேக் செய்து எடுத்தால் சூப்பரான தூத்துக்குடி மக்ரூன் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com