மதுரா பச்சடி அன்னாசிப்பழத்தில் செய்யக்கூடிய இனிப்பும், புளிப்பும் கலந்த ரெசிப்பியாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். கல்யாணம், பண்டிகை நாட்கள் போன்ற எல்லா விஷேசங்களுக்கும் கண்டிப்பாக இந்த மதுரா பச்சடி இருக்கும்.
மதுரா பச்சடி செய்ய தேவையான பொருள்:
அன்னாசி -1கப்.
மஞ்சள் தூள்-சிறிதளவு.
தேங்காய் -1/2 கப்.
தயிர்-1/2 கப்.
பச்சை மிளகாய்-2
ஜீரகம்-1 தேக்கரண்டி.
நாட்டு சக்கரை-3 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
கடுகு- சிறிதளவு.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
மதுரா பச்சடி செய்முறை விளக்கம்:
முதலில் குக்கரில் சிறிதாக வெட்டிய அன்னாசிப்பழம் 1 கப், தண்ணீர் 1கப், மஞ்சள்தூள் சிறிதளவு சேர்த்து 4 விசில் வைத்து எடுக்கவும்.
இப்போது ஒரு பவுலில் சிறிதாக நறுக்கிய தேங்காய் ½ கப், தயிர் ½ கப், பச்சை மிளகாய் 2, ஜீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது வெந்த அன்னாசிப்பழத்துடன் 3 தேக்கரண்டி நாட்டு சக்கரை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து அதில் சிறிதளவு கடுகு சேர்த்து நன்றாக வெடிக்கவிட்டு அதை இந்த கலவையில் சேர்த்துவிடவும். அவ்வளவுதான் சுவையான மதுரா பச்சடி தயார். நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
முட்டை மலாய் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி- சிறிதளவு.
கருவேப்பிலை-சிறிதளவு.
இஞ்சி-1 துண்டு.
பூண்டு-4
முந்திரி-10
முட்டை-4
சோம்பு-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
பிஸ் கிரீம்- தேவையானஅளவு.
முட்டை மலாய் மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 1 தேக்கரண்டி சோம்பு, 1துண்டு இஞ்சி, பூண்டு 4, பச்சை மிளகாய் 2, சிறிதாக வெட்டி வைத்த வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, முந்திரி 10 சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு காடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்த்து அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு அதில் கடைசியாக வேகவைத்து வைத்திருக்கும் முட்டையை சேர்க்கவும். இதை 2 நிமிடம் மூடி வேக வைத்து கடைசியாக பிரெஸ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடவும். செம டேஸ்டான முட்டை மலாய் மசாலா தயார். இதை பூரி, சப்பாத்தியோட வைத்து சாப்பிடும்போது அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.