தயிரைப் பயன்படுத்தி மூன்று வகை ரெசிபி செய்யலாம் வாங்க!

தயிர் பர்பி
தயிர் பர்பி
Published on

ழங்காலம் தொட்டே தமிழர்களின் உணவு பழக்கத்தில் தயிர் முக்கிய உணவாகிறது. இந்த தயிர் வைத்து ரெசிபி  செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

1.   தயிர் பர்பி

தேவையான பொருட்கள்:

கட்டி தயிர் _350 கிராம், சீனி_1/2 கிலோ,  கோதுமை மாவு 1/4 படி,பால்_1/2லிட்டர், ஏலக்காய்_5 கிராம்,குங்குமப்பூ _2 கிராம், நெய்_250 கிராம்

செய்முறை:

கட்டி தயிரை கெட்டியான ஒரு வெள்ளை துணியில் கொட்டி 4 மூலையையும் சேர்த்துக் கட்டி தொங்க விட வேண்டும். இப்படி 4 மணி நேரத்திற்கு மேல் கட்டி வைத்திருந்தால் அந்த தயிரில் உள்ள தண்ணீர் எல்லாம் வடிந்து விடும். இந்த தயிருடன் சீனியையும் சிறிது பாலில் கரைத்து குங்குமப்பூ சேர்த்து நன்றாக கடைந்து சர்க்கரை கரைந்த பின் அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.

பாகு பக்குவம் அடைந்ததும், கோதுமை மாவையும், நெய்யையும் கூட கலந்து நன்றாக கிளறி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து கொஞ்ச நேரத்திற்கு பின் ஒன்றாக கலந்து இறுகும் பதத் தில் நெய் தடவி வைத்தி ருக்கும் தட்டில் இந்த பாகை கொட்டி சமமாய் பரப்பி ஏலக் காய் பொடியை தூவவும். நன்றாக ஆறிய பின் கத்தியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். சுவையான தயிர் பர்பி தயார்.

இதையும் படியுங்கள்:
உடற்பிரச்னைகளின் அறிகுறிகளைக் காட்டும் நாக்கு!
தயிர் பர்பி

2.   தயிர் சீடை

தேவையான பொருட்கள்:

பச்சிசி _1/4 படி, வெண்ணெய்_100 கிராம்,    கட்டி தயிர் _1/4 படி, காயப்பொடி _1/2 ஸ்பூன், வற்றல் _8 இஞ்சி_சிறு துண்டு, எண்ணெய் _1/2 லிட்டர், உப்பு _தேவைக்கு

செய்முறை:

அரிசியை ஊறவைத்து இடித்து நைஸ் சல்லடையில் சலித்து கொள்ளவும். தயிரை ஒரு மெல்லிய துணியில் கொட்டி முடிச்சு கட்டி தூக்கி விடவும்.

பின்னர் உப்பு, வற்றல், இஞ்சி, பெருங்காயம் எல்லாம் வைத்து நைசாக அம்மியில் அரைத்து தயாராக வைத்தி ருக்கும் அரிசி மாவுடன் கலந்து, வெண்ணெயுடன், ஒட்ட தண்ணீர் வடித்து விட்ட தயிர் மெத்தையை திரட்டி எடுத்துப் போட்டு சேர்த்து பிசையும் போது உருட்டும் பதமாகவே இருக்கும். அப்படி போதா விட்டால் நீர் தெளித்து பிசைந்து வெள்ளை துணியை பிரித்து போட்டு சிறு சுண்டைக்காய் அளவில் ஒரே சீராக உருட்டி போட்டு ஒன் றரை மணி நேரம் கழித்து அடுப்பை மூட்டி வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீடைகளை ரொம்ப நெருக்கம் இல்லாமல் போட்டு ஓசை அடங்க வேக விட்டு எடுக்கவும். மிகவும் சுவை யான தயிர் சீடை தயார்.

தயிர் வடை
தயிர் வடை

3.   ஜவ்வரிசி தயிர் வடை

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி _1 கப், ஜவ்வரிசி ஊற தேவையான புளித்த தயிர், அரிசி மாவு _1/2 கப், உளுத்தம்பருப்பு_ 1/2 கப்  மல்லி கீரை _சிறிது  பெருங்காயம்_1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் _2 இஞ்சி சிறு துண்டு, எண்ணெய் _1/2லிட்டர்

செய்முறை:

ஜவ்வரிசியை புளித்த தயிரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

மல்லி கீரை, மிளகாய், இஞ்சி, உப்பு, கருவேப்பிலை இவற்றை அம்மியில் நைசாக அரைத்து கொள்ளவும். ஊறிய ஜவ்வரிசி, அரைத்த உளுந்து மாவு, அரைத்த விழுது,1/2 கப் அரிசி மாவு இவற்றை சேர்த்து வடைமாவு பக்குவத்தில் பிசைந்து  வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். புசு புசு ன்னு ஜவ்வரிசி தயிர் வடை ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com