ருசிக்க ருசிக்க பேபி கார்ன் மஞ்சூரியன்!

பருப்புருண்டை ரசம்
பருப்புருண்டை ரசம்

பேபி கார்ன் மஞ்சூரியன்

பேபி கார்ன் 10

மைதா மாவு 1/4 கப்

சோள மாவு  1/4 கப்

அரிசி மாவு 1/4 கப்

உப்பு தேவையானது

காரப்பொடி 1 ஸ்பூன்

பூண்டு 10 

வெங்காயம் 1

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

சோயா சாஸ் ஒரு ஸ்பூன் 

டொமேட்டோ சாஸ் 2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

பேபி கார்ன்ஐ நறுக்கி இரண்டு நிமிடம் சூடான நீரில் போட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசையவும். வேகவைத்த பேபி கார்ன் சேர்த்து பிசிறி எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

அடி கனமான வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு சோயா சாஸ் 1 ஸ்பூன்,  டொமேட்டோ சாஸ் 2 ஸ்பூன், சிறிது சோள மாவு சேர்த்து கலந்து பொரித்து வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிது தூவி கலந்து பரிமாற மிகவும் ருசியான பேபி கார்ன் மஞ்சூரியன் தயார்.

பருப்புருண்டை ரசம்;

துவரம் பருப்பு 1/2 கப் 

உப்பு சிறிது 

காய்ந்த மிளகாய் 6 

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி சிறிது

புளி எலுமிச்சை அளவு 

தக்காளி ஒன்று

ரசப்பொடி 2 ஸ்பூன்

பருப்புருண்டை ரசம்
பருப்புருண்டை ரசம்youtube.com

தாளிக்க:

நெய், கடுகு, மிளகுப் பொடி, சீரகம், கருவேப்பிலை துவரம் பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது கலந்து உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடங்கள் வேக விடவும்.

இதையும் படியுங்கள்:
அக்கார வடிசல் கோவில் பிரசாதம் வீட்டிலேயே செய்யலாமே!
பருப்புருண்டை ரசம்

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை எடுத்து 2 கப் நீரில் கரைத்து விடவும். அதில் உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி1, பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன், ரசப்பொடி 2 ஸ்பூன் சேர்த்து அடுப்பில் வைத்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். 

தேவையான அளவு நீர் விட்டு ரசத்தை விளாவி அதில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து ரெண்டு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். வாணலியில் சிறிது கடுகு, சீரகம், மிளகுத்தூள், கருவேப்பிலை சேர்த்து ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டி விட மணக்க மணக்க பருப்புருண்டை ரசம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com