
\பாலாடை பாயாசம்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி அடை (பாலாடை ) - 1 கப் (பாக்கெட் கடைகளில் கிடைக்கும்)
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலத்தூள் - 1 சிட்டிகை
நெய் - 4 டீஸ்பூன்.
உடைத்த முந்திரி - 10,
பால் - 1 கப்
செய்முறை:
பாலாடையைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 1 1/2 கப் நீரில் குழையாமல் வேகவிடவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து கல் மண் போக வடிகட்டி வெந்த பாலாடையில் ஊற்றவும்.
இரண்டு கொதி வந்ததும் வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவல், பாதி முந்திரி சேர்த்து வதக்கி ஆறிய பின் மிக்ஸியில் நீர் ஊற்றி கர கரப்பாக அரைத்து
கொதிக்கும் பாயாசத்தில் ஊற்றி கொதி வந்ததும் ஏலத்தூள் தூவி இறக்கவும். மீதி முந்திரியை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
சுவையான பாசுமதி அரிசி பாலாடை பாயசம் ரெடி. செய்து பாருங்கள் பாயசத்தை அசத்தலாக இருக்கும்.
தயிர் போண்டா
தேவையான பொருட்கள்:
தயிர் - 3/4 கப்
மைதா மாவு - 1 கப்
சீரகம் - 1 டீ ஸ்பூன்.
இஞ்சி - சிறு துண்டு.
பச்சை மிளகாய் - 2
உடைத்த முந்திரி துண்டுகள் - 10
பெருங்காயத்தூள் - சிட்டிகை
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தயிரைப்போட்டு அதில் மைதா மாவு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், நறுக்கிய இஞ்சி. நறுக்கிய பச்சை மிளகாய், முந்திரி துண்டுகள் அனைத்தும் சேர்த்து பஜ்ஜி மாவைவிட கெட்டியாக கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கையால் எடுத்து சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
ருசியான தயிர் போண்டா ரெடி.
சுலபமான சுவையான போண்டா செய்து அசத்தவும்.