சுவைமிக்க மொறு மொறு சேம்பு பக்கோடா!

Yummy Moru Moru Sembu pakkoda!
Yummy Moru Moru Sembu pakkoda!

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 8, கடலை மாவு, அரிசி மாவு தலா – ½ கப், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்,  உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயத் தூள் – ¼  டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு -

செய்முறை:

சேப்பங்கிழங்கை பாதி வெந்தவுடன் தோலுரித்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் (நன்கு வேகவிடாமல், அரை வேக்காட்டில் வேகவிடவும்) கடலை மாவு மற்றும் அரிசி மாவுடன் மிளகாய்ப் பொடி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கரைத்துக்கொண்டு, சேம்பு வில்லைகளை ஒவ்வொன்றாகத் தோய்க்கவும். நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
மூங்கில் குருத்தில் இருக்கும் முத்தான நன்மைகள்!
Yummy Moru Moru Sembu pakkoda!

மொறு மொறுவென்று சுடச் சுட சாப்பிட... சுவையாகவும், டேஸ்டியாகவும் இருக்கும். இந்த பக்கோடா மழை நேரங்களில் சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com