
இன்றைக்கு சுவையான பொட்டுக்கடலை லட்டு மற்றும் வாழைப்பழ பாயசம் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பொட்டுக்கடலை லட்டு செய்ய தேவையான பொருட்கள்.
சர்க்கரை-3/4 கப்.
பொட்டுக்கடலை-1கப்.
பாதாம்-10
முந்திரி-10
திராட்சை-10
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
நெய்-1 குழிக்கரண்டி.
பொட்டுக்கடலை லட்டு செய்முறை விளக்கம்.
முதலில் மிக்ஸியில் சர்க்கரை ¾ கப் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். 1 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதையும் பவுலில் சேர்த்துக்கொள்ளவும். பாதாம் 10 சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
இத்துடன் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது ஒரு குழிக்கரண்டி நெய்யை காயவைத்து முந்திரி 10, திராட்சை 10 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து பவுலில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதை நன்றாக கலந்துவிட்டு உருண்டைகளாக லட்டுகளை பிடித்து பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான பொட்டுக்கடலை லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வாழைப்பழ பாயசம் செய்ய தேவையான பொருட்கள்.
நேந்திரம் பழம்-4
தேங்காய்-1 கப்.
நெய்-2 தேக்கரண்டி.
முந்திரி-10
நறுக்கிய தேங்காய்-1 கைப்பிடி.
வெல்லம்-1/2 கப்.
ஏலக்காய்-2.
வாழைப்பழ பாயசம் செய்முறை விளக்கம்.
முதலில் நேந்திரம் பழம் 4 எடுத்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது 1 கப் தேங்காயை எடுத்து மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ½ கப் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது வாழைப்பழம் நன்றாக வெந்ததும் அதை வெட்டி மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து நெய் 2 தேக்கரண்டி விட்டு அத்துடன் சிறிதாக நறுக்கி வைத்த தேங்காய் 1 கைப்பிடி, முந்திரி 10 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அதே ஃபேனில் அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு அத்துடன் ½ கப் வெல்லம் சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்துவிட்டு இத்துடன் தேங்காய்பாலை சேர்த்து கலந்து விட்டு ஏலக்காய் 2 இடித்து சேர்த்துக்கொண்டு கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, தேங்காயை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், சுவையான வாழைப்பழ பாயசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்