முதுகெலும்பு நலமாக வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்!

இந்தக்காலத்தில் எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே வந்து விடுகிறது. மேலும் பணிச்சுமையும் அதிகம், அதுவும் இரவுபகல் பாராமல், எந்நேரமும் கணிணி முன்பு அமர்ந்து உடல் சோர்ந்து போனாலும் விடாப்பிடியாக இருந்து வேலை செய்து கொண்டே இருப்பது போன்ற இந்த காரணங்களினால் முதுகு எலும்பு விரைவில் பலவீனமடைந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
முதுகெலும்பு நலமாக இருக்க தினமும் கீழ்க்காணும் சாதரணமான பயிற்சிகளை செய்தாலே போதுமானது.
1. தினமும் 21 முறையாவது குனிந்து கால் பெருவிரலை உங்கள் கையில் உள்ள ஆள்காட்டி விரலால் தொட்ட பின் நிமிருங்கள்
2. எப்போது எங்கே அமர்ந்தாலும் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். முதுகை வளைத்து உட்கார்ந்தால் முதுகெலும்புக்கு பிரச்சனை தேடி வரும்.
3. எங்கேயும் எப்போதும் முதுகை நிமிர்த்தி நிமிர்ந்து நில்லுங்கள்.
4. படுக்கையில் படுக்கும்போது சுருண்டு படுக்காதீர்!
5. கடினமான கனமான தலையணைகளைத் தூக்கியெறிந்து மிருதுவான தலையணை வாங்கி பயன்படுத்துங்கள்.
6. ஒருநாளைக்கு 23 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லவேண்டும்.
7. ஒரே இடத்தில் 1 மணிநேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக உட் காராமல், 1 மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடை நடந்து வாருங்கள்.
8. இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது குனிந்து உட்கார்ந்து ஓட்டாமல் நன்றாக முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து ஓட்டுங்கள்.
9. அதீத எடையுள்ள பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காமல், முதுகை நிமிர்த்தி கால் கை மட்டும் மடித்து அந்த எடையுள்ள பொருளை தூக்கவும்.
10. காலை மாலை என இருவேளையும் சுமார் 20 தடவைகள் உங்களது கைகளை வானம் நோக்கி உயர்த்தி நீட்டுங்கள். பின் மடக்குங்கள்.