மூங்கில் அரிசியின் முத்தான நன்மைகள்

மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.
மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது.
மூங்கில் அரிசியில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது பாக்டீரியாவால் ஏற்படும் சிதைவு, பற்குழி ஆகியவற்றிலிருந்து பற்களைப் பாதுகாக்கவும், பல் சொத்தை அல்லது பல் துவாரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
மூங்கில் அரிசியில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் செரிமான ஆரோக்கித்திற்கு மிகவும் பயனுள்ளதாகும்.
மூங்கில் அரிசி கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது.
மூங்கில் அரிசி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
இருமலுக்குப் பயன்படும் மூங்கில் அரிசியில் கனிசமான அளவு பாஸ்பரஸ் உள்ளது.
மூச்சுத்திணறல், மூட்டு வலி ஆகியவற்றிற்கு மூங்கிலரிசி அருமருந்து.