உடல் எடையைக் குறைக்கும் அற்புத டீ…

ஆரோக்கிய தகவல்.
உடல் எடையைக் குறைக்கும் அற்புத டீ…

குளிர்காலத்தில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து இஞ்சி டீ குடித்து வந்தால், எளிதில் உடல் எடை குறைவது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்னைகளும் குறையும்.

குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல நோய்கள் வருவது சகஜம். இந்த பிரச்னைகளை தடுக்க வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குளிர்ந்த காலநிலையில் கூட அவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வெல்லத்தில் நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. 

வீட்டில் நாம் பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். இதனை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர மற்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக வெல்லத்தை நாம் தினசரி எடுத்துக்கொள்வது நல்லது. சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியமானது. தீங்கு செய்யாது. காலையில் இஞ்சி டீயுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் புத்துணர்ச்சியுடன் இருப்பது மட்டுமின்றி பல உடல் நலக் கோளாறுகளையும் குறைக்கலாம். 

நமது உடலில் சேரும் தேவையில்லா நச்சுக்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக இவை நீண்ட நேரம் உடலில் இருந்தால் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றால், காலையில் ஒரு கப் வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும். இது கல்லீரலுக்கு சிறந்த சுத்தப்படுத்தியாகவும் உள்ளது. இதனால் தேவையற்ற நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்க முடியும். இந்த வெல்லம் கலந்த இஞ்சி டீயை தொடர்ந்து அருந்தி வந்தால், அசிடிட்டி, செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்னைகளிலிருந்து நம்மைக்  காக்கிறது. இந்த தேநீர் நமது குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. 

உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுபவர்கள் வெல்லம் கலந்த இஞ்சி டீயை தினமும் அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலில் சேரும் தேவையில்லாத கலோரிகள் கரையும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, துத்தநாகம், பொட்டாசியம், பல முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இது நமது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. இது நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது. காலையில் உடற்பயிற்சி முன் ஒரு கப் வெல்லம் கலந்த தேநீர் குடித்துவிட்டு பயிற்சி, செய்து வர நல்ல பலன் கிடைக்கும். 

குளிர்காலத்தில் நம்மில் பலருக்கும் இருமல், சளி பிரச்னை வரும். வெல்லம் கலந்த தேநீர் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பருவகால காய்ச்சலில் இருந்து உடலையும் பாதுகாக்கிறது. உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், எதிர்ப்பை உருவாக்கவும் உதவுகிறது வெல்லம் சேர்த்த இந்த அற்புத இஞ்சி டீ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com