பெரும் நன்மைகள் தரும் பெருங்காயம் !

பெரும் நன்மைகள் தரும் பெருங்காயம் !

நன்மைகள் :

  • பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

  • குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில் சிறிதளவு பெருங்காயப் பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்.

  • மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல் லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.

  • எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால் பல் வலி நீங்கும்.

  • வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் சிறிதளவு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து.

  • அரை ஸ்பூன் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது உங்கள் எடை குறைப்புக்கு உதவும்.

  • பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கனிசமாகக் குறைகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • பெருங்காயம் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கும் பயன்படுத்தலாம்.

  • சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

  • பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின், நமது கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.

  • சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்தும் பெருங்காயம்.

  • கால் ஸ்பூன் பெருங்காயத்தை நீர் மோரில்  கலந்து குடித்தால், கடுமையான வயிற்று வலி கூட, உடனே சரியாகும்.

  • பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com