வாழைப்பழத்தின் மருத்துவ குணமும், தனித்துவமான சுவையும்....!
‘‘வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.
வாழைப்பழத்தின் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதத்தில் மருத்துவ குணமும், தனித்துவமான சுவையும் கொண்டது என்பது வாழைப்பழத்தின் சிறப்பம்சம். பழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டது வாழைப்பழம் மட்டும்தான். இத்தகைய வாழைப்பழத்தின் வகைகள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.
புவன் பழம் மூல நோய்களுக்கு உகந்தது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.

செவ்வாழை இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச் சிக்கலை குணப்படுத்துகிறது. பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச் சத்து இருக்கிறது. சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும். அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஏலக்கி வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.