பச்சை ஆப்பிளின் பற்பல நன்மைகள்!

பச்சை ஆப்பிளின் பற்பல நன்மைகள்!

பச்சை நிற  ஆப்பிளில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

தினமும் ஒரு பச்சை நிற ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதற்கு உதவும். இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டும்.

இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

இதில் சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை அளவு அதிகம் கிடையாது. எனவே கிரீன் ஆப்பிளை தினசரி சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக நிர்வகிக்க உதவும். கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது வயிறு நிறைந்த தன்மையை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வும் குறையும்.

பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.

குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

கிரீன் ஆப்பிளில் வைட்டமின் சத்துக்கள் மட்டுமல்லாமல் மினரல்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் சருமத்தை மேருகூட்டுவதொடு மட்டுமல்லாமல் இளமையான சருமத்தை தக்கவைக்கவும் உதவுகிறது.

இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை வெளியேற்றி பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.

தினமும் ஒரு கிரீன்  ஆப்பிள் உட்கொண்டால், அல்சைமர் என்னும் நினைவாற்றலிழப்பு நோய் ஏற்படும் வாய்ப்புகளை தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com