கொடுக்காய்ப்புளியில் கோடி நன்மைகள்!

கொடுக்காய்ப்புளியில் கோடி நன்மைகள்!

* கொடுக்காய்ப்புளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

* கொடுக்காபுளி தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் வாத நோய் ஏற்படாது.

* நம் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்க தினமும் கொடுக்காபுளி சாப்பிட்டு வரவேண்டும்.

* கொடுக்காய்ப்புளி மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

* கொடுக்காய் புளி நீரிழிவு நோயை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நமது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதயத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்த பிரச்சனைகளிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

* சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து சரும ஆரோக்கியத்தை பராமரிக்க கொடுக்காய் புளி உதவுகிறது.

* கொடுக்காய்ப்புளி காயில் உள்ள விட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது.

* உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் கொடுக்காய்ப்புளி சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

* கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான நோய்கள், குடல் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி நல்ல மருந்து.

* கொடுக்காய் புளியில் வயிற்று புண் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நமது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது.

* கொடுக்காய் புளி கல்லீரலில் உள்ள அனைத்து நச்சு இரசாயனங்களையும் வளர்சிதை மாற்றம் செய்து, அவை நமது உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.

* கொடுக்காய் புளி மற்றும் இலைகள் முக்கியமாக காசநோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

* இதன் விதைகளிலிருந்து எண்ணைய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணைய் சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

* கொடுக்காய் புளியில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் தசையை தளர்த்தும் செயல்பாடு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com