சின்ன நெல்லிக்காயின் நன்மைகள்!

சின்ன நெல்லிக்காயின்  நன்மைகள்!

1. சின்ன நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

2. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் சாப்பிடலாம்.

3.நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக, செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

4.இக்காயில் உள்ள விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தினைப் பாதுகாக்கின்றன. விட்டமின் சி அதிகம் கொண்ட உணவினை உட்கொள்ளும்போது சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும், தூய்மையானதாகவும் மாறுகிறது.

5. நெல்லி இலையில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. அருநெல்லி இலையானது உடல் எடை குறைப்பிற்கு சிறந்த தீர்வாகும்.

6. கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு.

7.நெல்லிக்காய் தைலத்தை தலையில் தேய்த்தால், முடி நன்கு வளரும். இளநரை கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com