வரகு அரிசியின் நன்மைகள்!

ஆரோக்கியத் தகவல்
வரகு அரிசியின் நன்மைகள்!
Published on

வரகு அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகள் சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. புரதச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, மினரல்ஸ், கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, தையமின், நையஸின் போன்ற சத்துக்கள் வரகில் மிகுதியாக உள்ளது. இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்.

கோடைகாலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுகும்.

வரகரிசியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.

வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம் என்பதால், வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது, வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.

கண்புரை நோய்கள், கண் வீக்கம் என்ற கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது, மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது வரகரிசி.

பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மாதவிடாய்க் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.

வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com