விந்தை மிக்க விளாம்பழம்!
* பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது விளாம்பழம்.
* வாய் கசப்பு நீங்க விளாம்பழம் சாப்பிட வேண்டும்.
* தினமும் ஒரு விளாம்பழம் சாப்பிட்டு வர உடல் பித்தம் குறையும்.
* அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.
* விக்கல் விலக விளாம்பழத்துடன் சர்க்கரை கலந்து சாப்பிடவும்.
* தொண்டை வலி குறைய விளாம்பழம் சாப்பிடலாம்.
* விளாம்பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* மூலம் குறைய... துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும். கல்லீரல் பலம் பெறும்.
* விளாம் பழத்தின் சதைகளை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.